உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

ஜானு

391

இது முழந்தாள் என்னும் பொருளில்வரும். கணு என்பது சாணு சானு எனவாம். ககரம் சகரமாகும். மூட்டுடையது என்பது.மூட்டெனினும் சந்திப்பெனினுமாக்கும். சாணென்னும் அளவுப்பெயர்க்கும் இக்கணுவென்பதே முதற்சொல்லாம். மூங்கிலில் ஒரு கணுமுதல் மற்றோர் கணுவரையில் உள்ள அளவு சாண் என்க. அக்காலமுறைமைப்படி பத்து அங்குலமாகும். சானுவென்பது சானம் சகனம் எனத்திரிந்து முடிந்தால் முன்பக்கத்துள்ளதாகலின் முன்பக்கத்தை யுணர்த்தும்; சகனம்

- முன்பக்கம், அரையின்கீழ்பாகத்துக்காயிற்று.

வேணி

இது பின்னல் என்னும் பொருளில்வரும் பின்புறத்தை யுணர்த்தும் வென்என்பது இதன் முதற்சொல்லாம். அது வேணி வேணி எனவாயிற்று. பின்புறத்தே தொய்வது என்பது பொருள். சூரியன் உதிக்குந்திசை முதற்றிசையாய் முன்பக்கத்திருத்தலின் பின்பக்கத்துள்ளது மேற்காம். வென் என்பது வெற்கு மேற்கு எனவாயிற்று. முன் - பிரிவு, பின் முதுகு, வென் எனவாகும். முதுகு இருபிரிவுடையதாகலின் அப்பெயர்த்து வென் வெரின் எனவாம். வெந் வெரிந் எனல் பின்னை முதலாசிரியர் ழவ.. கு. பின்னல் என்பது பின் என்பதிற் பிறந்தது.

மண்ட

இது ஆமணக்கென்னும் பொருளில்வரும், ஆடம் என்பது ஆமணக்காகலின் அது ஆமடம் ஆமண்டம் மண்டம் மண்ட: எனவாயிற்று. ஆமணக்கென்பதும் ஆமண்டஎன்பதன் சிதைவு. ஆமணக்கு உட்டுளையுடையதாகலின் அப்பெயர்த்து ஆளம் ஆடம் என்பனவாம். ஆளம் உட்டுளை, ஆளம் ஆலம் (அம்புக்கூடு) ஆணம் (கள்) ஆணகம் (சுரை) ஆளகம் (சுரை) ஆணம் ஆனம் எனவாய்க் கள்ளையே யுணர்த்தும் உள்ளிருந்து வருவது என்பது என்பது பொருள். கள்ளையுணர்த்தும் மென்பதும் ஆனமென்பதன் திரிபு. உட்டுளையுடையதாகலின் யானம் மரக்கலத்துக்குமாம். அவ்யானம் என்பதில் யாணம் யாத்திரை பிரயாணம் முதலியன பிறக்கும். பிர உபதுர்க்கம், வி யென்பது பிரவெனவாயிற்று. பிசிதம் என்பதாலுணர்க.

யான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/416&oldid=1574842" இலிருந்து மீள்விக்கப்பட்டது