உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் -8 8

இங்ஙனம்,

தங்கள் அன்பன்

பா. சிவராமன்

திருநெல்வேலி இந்து காலேஜ் தமிழ்ப்பண்டிதர்.

சென்ட்மேரித்தோப்பு,

11. 11. 1901.

அன்புள்ள ஐய,

நான் தம்மிற்கலந்து பலநாட்கழிந்ததேனும், தங்கள் அருமை பெருமைகளை அன்றுதொட்டு என்றும் மறந்த வனல்லேன். நாடோறுமுள்ளன்பு பெருகுவது, சில தினங்களின் முன்னர் என் நண்பர் ஒருவர், தாங்களியற்றிய "மும்மணிக் கோவை”யை, என் பார்வைக்கு அனுப்பினர். அதனைக் கண்டதுந் தங்களைக்கண்டாற்போலும் ஆனந்தமடைந்தேன். அது தங்கள் மீதுள்ள எனது அபிமானத்தை விருத்தி பண்ணிற்று.

அச்சீரியநூல் சொற்சுவை பொருட்சுவைநிரம்பிக் கற்றோறுங்கருத்தைக் கவர்வது. பத்துப்பாட்டு, எட்டுத் தொகையாகிய சங்கச்செய்யுட்களின் றிறம்வாய்ந்து ஆக்கி யோனது, தமிழ் ஆராய்ச்சியைத் தெள்ளிதிற் காட்டுவது சையுடை மை ஆழமுடை மை யமைந்து ஆன்றோர் செய்யுட்களின் அழகெலாங்க வர்ந்து, செந்தமிழ்ச்சொற்கள் செறிந்து நல்லொழுக்கம் பயின்றிருப்ப தொன்று; அதனைப் படித்தோற்குப் பெரிது வியப்பையும் உவப்பையும் பெருக்கிற்று.

க்காலத்துச் சீரியவல்லன சில நூல்களும் கலாசாலைப் பரீக்ஷைகட்குமாக ஏற்படுத்தப்படுகின்றன. அது சிற்சிலரது செல்வாக்கானேபோலும் மும்மணிக்கோவை போன்றன நமது சர்வகலாசாலைகளிற் பாடமாக நின்று தகுதியை நிரம்பவுமுடைத்து. ஏனோ இந்நூல் பி. ஏ. வகுப்புப் பாடம் அம்மூன்றில் ஒன்றாதல் கூடாது. இதுவிஷயத்தில் தாங்கள் சிறிது முயற்சி செய்ய அனைத்தும் பிறக் ஸ்ரீளளஸ்ரீ தண்டலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/63&oldid=1574479" இலிருந்து மீள்விக்கப்பட்டது