உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

37

வேறு பாஷைகளில் இருந்து அரிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தலும் சரித்திரங்கள் பிரசுரித்தலும்.

5.

வருஷாந்தம்

பண்டிதர்களைக்கூட்டி உற்சவம்

நடப்பித்தல்.

6. தமிழ் நூலுரைகள் வெளியிடுவதற்கு உதவி செய்தல்.

7. உபந்நியாசங்கள் செய்வித்தலும் பிறவுமாம், அரசரவர்களதும் தேவரவர்களதும் நன்முயற்சியால் பெருந்தொகையான பொருள் திரட்டப்பட்டு இதற்கு நிதியாக வைக்கப்படும். இஃது அபிவிருத்தியுற்றுத் தமிழுலகத்திற்கு நன்மை செய்யுமென்று எதிர்பார்க்கின்றோம்.

மணியார்டர் கமிஷன்: பத்து ரூபாவுக்கு மேற்படாத தொகைக்கு இரண்டணா கமிஷன் ஏற்படுத்தியிருப்பதை மாற்றி ஐந்து ரூபாவுக்கு மேற்படாத தொகைக்கு ஓர் அணா கமிஷன் ஏற்படுத்தப்போவதாகத் தெரிகின்றது.

இவ்வ

காங்கிரெஸ்

மகாசபை: வ்விந்திய மகாசபை ருஷம் காளிகட்டம் எனப்படும் கல்கத்தா நகரத்தில் கூட்டப்பட்டது. நமது ஆரியகண்டத்தில் உள்ள கனவான்கள் தத்தம் அபிப்பிராயங்களை வெளியிட்டு உபந்நியஸித்தார்கள். அக்கிராசனாதிபதியாக அமர்ந்திருந்தோர் ஸ்ரீதீன்ஷாஇடல்ஜீவாச்சா என்னும் பாரசீக கனவானாம்.

இதற்கு

திருநெல்வேலி,

7.4.02

எனது ஆப்தரத்தினமாகிய ஐயா,

தாங்கள் அன்புடனனுப்பிய புத்தகங்களிரண்டனுள் “சோமசுந்தரக்காஞ்சி யாக்கத்தைப்” பார்த்தேன்; பார்த்தேற் கது தன்பகைவருங்கண்டக மகிழ்ந், தறிவுநிரம்பி, உறுதி சூழ்ந்துள்ளன்பு செய்துறவாடு மியல்புடையதாய்க் காட்டிற்று. இது தங்களிடை எனக்குள்ள நட்பின் மிகுதிகொண்டானும், செந்தமிழிடை எனக்குள்ள அன்பின் பெருக்கானுமன்றி, "மெய்ப்பொருள்காண்டல்" ஒன்றே பற்றி உற்றுநோக்கி

யாராய்ந்து கூறியதொன்றாம்.

மும்மணிக்கோவையை விரைவிலாராய்வேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/62&oldid=1574478" இலிருந்து மீள்விக்கப்பட்டது