உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம்-8

கொடியகொடிய வியாதிகளால் பிடிக்கப்படாது பெரும்பாலும் தேக ஆரோக்கியம் உள்ளதாய் இருக்கின்றனர்.

8.

மாமிசபோஜனிகளுக்கு ஜீரணசக்

குறைந்து

போவதனால் அதனை நிவர்த்திக்கும் பொருட்டு மதுபான திரவியங்களை உபயோகப்படுத்துகிறார்கள். சைவபோஜனம் செய்பவர்களுக்கு ஜீரணசக்திகுறைவுபடாமையால் அவர்கள் மதுபான வஸ்துக்களை உபயோகிப்பதில்லை. நாம் அறிந்த மட்டிலும் சைவபோஜனஞ்செய்பவர்களுக்கு மதுபான திரவியங்கள் கொஞ்சமும் வேண்டப்படுவதேயில்லை. இதனால், சைவபோஜனம் எங்கும் விருத்தியாகுமானால் மதுபான வழக்கம் அறவே யொழிந்து போம்.

நம் அரசருடைய உருவப்பிரதிமை: நமது மாட்சிமை தங்கிய எட்வர்ட் அரசர் மகுடமன்னராய் அமர்ந்திருக்கும் கோலக்குறிப்போடு ஒரு பிரதிமை அமைத்துச் சென்னை மாநகரத்தில் தாபிக்கப்போகிறார்கள். இஃது அவ்வரசர்க்குப்

பட்டாபிஷேகமாகும்

விளங்கும்.

நாளில்

பகிரங்கக்காட்சியொடு

மதுரைச் தமிழ்ச் சங்கம்: இப்பெயர் கொண்ட சங்கம் ஒன்று ஸ்ரீராமநாதபுரம் இராஜா அவர்களாலும் ஸ்ரீபாண்டித் துரைத்தேவரவர்களாலும் தாபிக்கப்பட்டிருக் கின்றது. தமிழை அபிவிருத்திசெய்யும் பொருட்டு இச் சங்கத்தாராற் செய்யப் பட்ட ஏற்பாடுகள் வருமாறு.

1. ஒரு கல்விச் சாலை தாபித்து அதிற் கல்வி பயிலும் மணாக்கர்களுக்கு நன்கொடையளித்தல்

2. 'பாண்டியன் புத்தகசாலை' என்னும் புத்தகக் களஞ்சிய மொன்று தாபித்தல்.

3. ஓர் அச்சியந்திரசாலை தாபித்து அதன் வழியாக ஒரு மாதாந்தரப்பத்திரிகையும் பிறவும் பதிப்பிட்டுப் பரிகட னஞ்

செய்தல்.

4. பழைய தமிழ் நூல்களுக்கு உரை எழுதுவித்தலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/61&oldid=1574477" இலிருந்து மீள்விக்கப்பட்டது