உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

35

பலங்களும் வாயுரோகபாஷாண சம்பந்தமான வேறுபல வியாதிகளும் மாமிசபோஜனத்தினாலேயே உண்டாகின்றன. அல்லது, மாமிசபோஜனஞ் செய்தவர்களாகிய பூர்வீகர் களுடைய வம்சத்திற் பிறப்பதனாலும் உண்டாகின்றன. ஆயினும், முறையாகச் சைவபோஜனம் செய்துவரக் கூடுமானால் அவ்வியாதிகளெல்லாம் அறவே யொழிந்துபோம். நன்றாய்ச் சமைக்கப் படாததும் நோயுள்ளதுமாகிய மாமிசத்தைப் புசிப்பதனால் சொரி சிரங்கு முதலிய தொற்று வியாதிகள்

உண்

ாகின்றன.

3. இன்னும் ஆஸ்திரேலியாகண்டத்தில் உழைப்பாளி களான பக்குவமடைந்த இளம்பெண்கள் மாமிசங்களை விசேஷமாகத்தின்பதனால் அவர்களெல்லாருக்கும் பெரும் பாடு என்னும் உதிரப்பெருக்கு நோய் உண்டாயிருக்கின்றது.

4. சைவபோஜனத்தால் விளையும் நன்மைகளை நன்கு அறிந்த ஆங்கிலேய வைத்திய பண்டிதர்கள் எல்லாரும் தம் அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கு அஞ்சுகிறார்கள். மாமிசபோஜனத்தை நீக்கிவிடுவதனால் கெடுதியுண்டாகு மென்று நினைக்கும் ஜனங்களெல்லாரும் தம்மை அவமதிப் பார் என்றும், தமது பிழைப்புக்குக் குறைவுவருமென்றும் நினைப்ப தனாலே யாம் இனி இந்தத்தடைகள் எல்லாம் நீங்குமானால் அப்பண்டிதர்கள் தாராளமாய்த் தம் அபிப்பிராயங்களை வெளியிடுவார்கள்.

5. மாமிசத்தைப்புசிப்பதனால் அஜீரணம் உண்டாகி வாயுரோக முதலிய பல வியாதிகள் உண்டாகின்றன. ஜீரண சக்தியை மிகவும் உண்டுபண்ணும் சைவபோஜனம் செய்வ தனால் அவ்வியாதிகள் எல்லாம் ஒழிந்து போகின்

றன.

6. பிரபலவைத்திய சாலைகளில் யாம் உத்தியோகம் செய்தபோது அங்கங்கு யாம் தேகபரிசோதனையின் பொருட்டு வியாதியஸ்தர்களின் தேகங்களைப் பதின்மூன்று வருஷ காலங்களாக ஏறக்குறையப் பதினாயிரம் பேர்வழிகள் வரையில் அறுத்துப்பார்த்த போது அவர்களில் ஒருவராவது சைவ போஜனஞ் செய்பவர் அல்லர்; எல்லாரும் மாமிசபக்ஷணிகள் தாம்.

7. சைவபோஜனஞ்செய்பவர்களாகிய இந்துக்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/60&oldid=1574476" இலிருந்து மீள்விக்கப்பட்டது