உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் 8 – 8

வழங்குதல் உலகத்திலுள்ள எல்லா மக்கட்கும் இயல்பாம். ஆங்கிலமக்கள் தம் பாஷையில் இலக்கண இலக்கியங் களெழுதி வளம்படுத்தும், அவர் பாஷை சாசர் என்னும் புலவர்காலத்து ஒருவாறாகவும், இக்காலத்தி லொரு வாறாகவும் இருவேறு வகைப்பட்டு ஒன்றனையறிந்தார் வேறொன்றனை யறியாவாறு வேறுபாடுறுகின்றது.

இனி, தமிழ்ச்சொற்பகுதி யுற்பத்தி முறையும் அப்பகுதிப் பொரு ளொற்றுமை பற்றிவருஞ் சொற்றொகுதியினியல்பும் நுணுகி யாராயுமிடத்துத் தமிழ்ச்சொற்பகுதிகள் பலவும் பிராணிகளொலிக்குறிப்பியற்கைக் காரணங்கொண்டு வழங்கும் அற்புதவியலினிது விளங்கும். தமிழ்வழங்கு நிலத்திற் புருடசரீர சிருட்டி யெய்திய முதுமக்கள் சொற் சொல்லுஞ் சாதுரியம் பெறுதற்கு முன்னெல்லாம், பறவையினங்கள்

சம்மாசாரக் குறிப்புகள்

மாமிசபோஜனம் மனிதருக்காகாது: அமெரிக்காவில் பிரபலவைத்திய சாஸ்திர பண்டிதராகிய டாக்டர் ஆர். எச். பெர்க்ஸ் என்பவர் மாமிசபோஜனம் மனிதருடைய தேகத்திற்கு சையாததென்னும் அபிப்ராயமுடையவர். அந்த அபிப்ராயத் தின் படியே தாமும் மாமிசபோஜனத்தை யொழித்துச்சைவ போஜனமே செய்து வாழ்கின்றார். அவர் தேகாரோக்கியமும் தேகபுஷ்டியுமுடையராய் இருக்கின்றார். இப்பிரபல பண்டிதர் அமெரிக்காவில் போஜன கிரம சங்கத்தார் ஒருவர் சைவபோஜன இயல்பைப்பற்றிச் சில விஷயங்கள் கேட்ட போது அவர் தாம் பின்வருமாறு கூறினார்.

1. ஒருவன் தன் ஆயுள் முழுவதும் தேகாரோக்கிய யனாயும் தேகபுஷ்டியுடையனாயும் விவேகியாயும் இருக்கவேண்டினால், அவன் மாமிச போஜனத்தை அறவே யொழித்துச் சைவபோஜனங்களையே உட்கொள்ளல் வேண்டும். உயர்ந்த சன்மார்க்கமுறையை அனுசரித்துப்பரிசுத்த மாகவும் மனுஷ இயல்புக்கு இயைந்ததாகவும் உள்ள சைவ போஜனம் செய்வது ஒன்றே எங்கும் பரவி நிலை பெற்றிருப்பதற்குக் காரணமாகிய நன்மார்க்கமாம்.

)

2. உலகமெங்கும் பரவி இருக்கும் வியாதிகளும் தேகதுர்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/59&oldid=1574475" இலிருந்து மீள்விக்கப்பட்டது