உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

33

நிகழ, மேலும் அவற்றை அஞ்ஞனஞ் சிதைத்து வழங்காவாறு ஆ சிரியர் அகத்தியனார், தொல்காப்பியனார் போன்ற நன்மக்கள் தோன்றி அச்சொற்களை மேல் வழங்குமுறைகாட்டி வரம்பறுத்து நூல்களெழுதிப்பாஷையை ஒழுங்கு படுத்தி நிறுத்துவாராயினர்.

இனி, இங்ஙனம் ஒழுங்குபடுத்தப்படாவழி அப் பாஷைகள் சிலகாலமெல்லாம் சிதைந்து சிதைந்து வழங்கி இறுதியில் வழக்கமற்று ஒழிந்துபோம். இதற்குத் தாஸ் மானியா

6

தேசத்திலுள்ள அநாகரிக மக்கள் வழங்கிய பாஷை

இறந்தொழிந்ததே உறுசான்றாம். இன்னும் சைபீரியா, ஆப்பிரிகா, சீயம் முதலிய தேசங்களிலுள்ள அநாகரிகமக்கள் வழங்கும் பாஷைகள் இரண்டு மூன்று தலைமுறைக்கெல்லாம் பூருவவுருவம் மாறி முன்னையுருவத்தொடு பின்னையுருவ மியையாது முழுவதூஉம் வேறு பட்டு வேறு வேறுபோல வழங்குமாறும் எமது சித்தாந்தத்தை வலியுறுத்தும். பிரீசியன் தீவுகளில், இரண்டு மைல்கட்கு மேற்படாத நிலவெல்லை யிலிருக்கும் அநாகரிக மக்கள் தங்கள் கிராமங்களில் வழங்கும் பாஷைகளையன்றிப் பிறகிராமங்களில் வழங்கும் பாஷை களையறியார். ஒரு கிராமத்திலுள்ளார் வேறொரு கிராமத் திற்குச் செல்வ தில்லாமையால் அவர்கள் விசேட வேறு பாட்டுடன் தம் பாஷையை வழங்க, அவ்வாறேமற்றைக் ாமத்தாரும் வழங்க இவ்வாற்றால் ஒருகாலத் தொன்றா யிருந்த ஒரு பாஷை தானே மற்றொரு காலத்தில் வேறு படவிரிந்து வித்தியாச முறுவதாயிற்று. இவ்வாறே நாகரிக மெய்திய எமது ஆரிய கண்டங்களிலும் ஒரு குடும்பத்தார் சொல்வழங்குமுறை ஒருவாறாகவும் வேறொரு குடும்பத்தார் சொல்வழங்குமுறை வேறொரு வாறாகவுந் திரிவுபடுகின்றன. நாகரிக விருத்திகொண்டு இலக்கண இலக்கிய வரம்புகடவாது எமது செந்தமிழ்ப் பெரும்பாஷை நடைபெறும்போதும், அதனைக்கல்லாத மாந்தர் அதன் சொற்களைத் தமது சளகரியத்திற்கு ஏற்ற பெற்றியெல்லாந் திரித்துச் சொற் சோர்வுபட உரைநிகழ்த்துகின்றார். 'வாழைப் பழம்' வாளப்பளம் வாயப்பயம் எனவும், ‘ஆயிற்று’ ஆச்சு எனவும், இருக்கிறது இருக்குது, இருக்கு எனவும் பிறவும் வழங்கப்படுதல் காண்க. இவ்வாறு சொற் சோர்வுபட

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/58&oldid=1574474" இலிருந்து மீள்விக்கப்பட்டது