உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் லயம் – 8

இனி இப்பெற்றியறியாத காரணச் சொற்களெனவும், காரணமின்றி வழக்குமாத்திரையாய் வரும் இடுகுறிச் சொற்க ளெனவுஞ் சொற்கள் இருவகைப்படு மென்றாராலெனின்; ஆசிரியர் தொல்காப்பியனார் எல்லாச் சொற்களுஞ் காரண முடையவென்றும், அக்காரணம் நுண்ணுணர்வுடையார்க் வென்றும் ஓதிய

கன்றி யேனையார்க்கினிது விளங்கா “மொழிப்பொருட் காரணம் விழுப்பத்தோன்றா” என்னுஞ் சூத்திரவிழுமிய நுட்பப்பொருளொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறிய பவணந்தியாருரை இக்காலத்துப் பாஷாதத்துவ நூற்பொருளோடும் ஒற்றுமையுறாது மாறு கொள்ளுதலால் அது பொருந்தாதபோலியுரையா மென்று மறுக்க. யாங்கூறியதே ஆசிரியர் நச்சினார்க்கினியர்க்குங் கருத்தாதல் அவருரையிற்காண்க. ஆகவே, ஆசிரியர் தொல் காப்பியனார் தவமுழுமுதலியலறிவான் இனிதறிந்து நிறீஇய தமிழ்ச்சொல்லுற்பவமுறை கடைப்பிடித்து அதனை நன்கா ராய்ந்து பயின்றுகோடல் இன்றியமையாது வேண்டற் பால தொன்றாலின் அதனை யான் அறிந்தவாறே நெறிப்பட ஆராய்ந்து செல்வாம்.

இனிப்பாஷைகளெல்லாஞ் சொற்கோவைப்பட்டுப் பொருள் அறிவுறுக்கும் வாக்கியங்களையுடையன. அவ் வாக்கியங்களெல்லாம் பொருள் அறிவுறுக்குஞ் சொற்களை யுடையன. அச்சொற்களெல்லாம் முதனிலை அல்லது பகுதி, இறுதி நிலை அல்லது விகுதி, இடைநிலை முதலிய பல அங்கங்களையுடையன.

இவ்வங்கங்களுள்ளும் முதனிலையை யொழித்து ஒழிந்தவெல்லாம் ஒரு காலத்து முழுமுதற்சொற்களாய்ப் பொருளறிவுறுத்திப் பின்னொரு காலத்து மக்கள் சொற் சோர்வுபட மொழிதலாற் பலவாறு திரிந்து மருவு இடைச் சொற்களென்று வழங்கப்படுவவாயின. இவற்றுள், முதனிலை யாகிய பகுதியும், ஒலிக்குறிப்பு, வியப்புக் குறிப்பு முதலிய காரணம்பற்றி வருவன சில ஒழியப் பிறவெல்லாம் முதன்முதல் நம்முதுமக்கள் சொற்சொல்லத்தொடங்கிய காலத்துப்பிறந்த சொற்கோவை சிதைந்து மருவிய சொற்களேயாம். நாகரிகம் விருத்தியுறுந்தோறும் விருத்தியுறுந்தோறும் அவ்வாறு அவற்றைச்சிதைத்து வழங்கும் மக்களுக்கு அசௌகரியங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/57&oldid=1574473" இலிருந்து மீள்விக்கப்பட்டது