உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

31

வேண்டும். அவ் வாறன்றி அதனின் வேறாய்த்தனித்தியல் தமிழ்ச் சொலுடைய ராகலான் அதுவும் பொருந்தாது. எனவே, தமிழ் மொழி ஆரிய பாஷையினின்றும் பிறந்ததாமென்பது ஒருவாற்றானும் பெறப்படாமையான், நியாயவுரை நிகழ்த்தவறியாத அவர் கூற்று வெறும் போலியே யாமென்பது உணர்நதுகொள்க. இது பற்றியன்றே பண்டிதர் மாக்ஸ்மூலர் து பாஷாதத்துவம் என்னுந்தமது, கருத்தைக் கூறினார்.

தமிழ்ச்சொல்லுற்பத்தி

ஒரு தமிழ்ச்சொல் ஒரு பொருளை யாங்ஙனமுணர்த் திற்று. அக்காரணத்தை நுண்ணிதாக ஆராய்ந்து அச்சொல்லுற் பத்தி முறைகாட்ட எடுத்துக்கொண்டமையான் இதற்கு இப்பெயர்தந்திட்டோம். இனித் தமிழ்மொழி ஒன்றேவல்ல பிற்காலத்துப் புலவோர் புலவோர் சிலர் அங்ஙனம் ஒவ்வொரு சொல்லின்கண்ணும் உற்பத்திக் காரணங்கண்டறியமாட்டா ராய்ச் சிலசொற்கள் மாத்திரம் காரணம்பற்றி வழங்குகின்றன, வேறு பலவெல்லாம் இப்பொருளை யறிதற்கு இச் சொல் லெனக் காரணம் வேண்டாது அறிவுடையோரால் இடப்பட்ட குறிகண் மாத்திரையேயாய் வழங்குகின்றன வாக லான், அவை ஒன்வொன்றும் உற்பத்திக்காரணமுடைய வென்று ரைப்பது பொருத்தமின்றாமென்று உரைக்கின்றார். மேலே, யாம் இனிதெடுத்து விவகரித்த தமிழ்வடமொழி யினின்று பிறந்ததாமா? என்னும் விஷயத்தில் சொற்றொகுதி யாகிய ஒரு பாஷை முழு முதற்கடவுளானும் அறிவுடை யோரானுஞ் செயற்கையாகச் சிருட்டித்து அளிக்கப் படுவதன்றி, மானு நாகரிக விருத்திமுறைக்கு ஏற்ப மானுடசுபாவமேயாய் இயன்று நிகழ்வதாமென்பது நிறுவப்பட்டதாகலிற் கடவுள ரானும் அறிவுடையோரானும் அது காரணமின்றிச் செய்யப் பட்டதென்பாருரை ஒரு சிறிதும் பொருந்தாது. அல்லதூஉம் அறிவுடையோராயினார் அங்ஙனங் அங்ஙனங் காரணம் பற்றாது செய்யவேண்டுவதுதான் என்னையென்று ஆசங்கிப் பார்க்குப் பிரதிமொழி கூறுதலாகா மையானும் அது பொருந் தாமை யறிந்து கொள்க. பிரபஞ்ச முழுவதூஉம் பரந்துகிடக்கும் மக்களெல்லாரும் வழங்கும் பாஷைகளொன்றாயினும் அங்ஙனங்காரணமின்றி ஒருவராற் செய்து கொள்ளப்படுவன வல்லவாய்ச் சுபாவகாரணங் கொண்டு நிகழ்தலானும் அது பொருந்தாமை கண்டு கொள்க.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/56&oldid=1574472" இலிருந்து மீள்விக்கப்பட்டது