உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

  • மறைமலையம் லயம் – 8

ங்ஙன மாக அவ்விருவர் பாஷைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிறந்தது என்று கூறுமாறு யாங்ஙனம்? இன்னும், அவை யெல்லாம் அவ்வம்மக்களாலியற்கையாகவே

செய்துகொண்டு வழங்கப்படுவனவாமென்பது இனி தெடுத்து விளக்கினோ மாதலால் தமிழர், ஆரியர் வருந்துணையுந் தாம் பாஷையின்றி ஊமராயிருந்து அவர் வருதன்மாத்திரையானே அவர் பாஷையைக் கற்றுத் தாமொரு பாஷை இயற்றிக் கொண்டு வழங்கினாரெனக்கூறுதல் உலக வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் மாறுகொள்ளும் பொய்யுரையா யொழிந்திடும். அல்லது, அவ்வாறு உலகவழக்கோடு முரணி இயற்றிக் கொண்டாரெனினும், அவ்வாரியமொழிச் சம்பந்தம் பெறாது அவ்வாரிய பாடையினும் பலவாகி விரிந்த சொற் களைத் தமிழ்மொழியுடைய தாமாறு யாங்ஙனம்? அற்றன்று தமிழர் மிக நுண்ணிய அறிவாற்றலுடையராகலான் அவ்வாறு நலம்பட விரிந்த மொழியொன்று செய்துகொண்டாரெனின்; அத்துணை நுண்ணிய அறிவுடையராயின் அவர் நாகரிக முடையராதலும் வேண்டும். வேண்டவே நாகரிகத்திற்கு ஒருதலையான் வேண்டப்படும் பாஷையும் பாஷையும் முன்னரே யுடையராதல் வேண்டும். அல்லதூஉம், அத்துணை நுட்பவறி வாளர் தாமே ஒரு பாஷையியற்றிக்கொள்ளவறியாது ஆரியர் வருந்துணையும் ஊமராயிருந்தாரெனல் யாங்ஙனம்? அற்றன்று, ஆரியர் வருந்துணையும் ஊமராயிருந்து அவர் வந்ததுணை யானே அவரால் அறிவு பெற்றாரெனின்; அத்துணை அநாகரிக ராயிருந்த தமிழர், நாகரிகமுடைய ஆரியரைக் கண்டுழி அஞ்சி அவரை நெருங்காது அகன்று ஒழுகுவா ரென்பது நாகரிக வாழ்க்கையுடையராகிய ஆங்கில நன்மக்களைக்கண்டஞ்சி யகன்று ஓட்டம் பிடிக்கும் ஆப்பிரிக்கர் அமெரிக்கர் முதலிய அநாகரிக சாதியார் மாட்டுக் கண்டுகொள்ளப் படுமாதலின் அதுவும் பொருந் தாது. அற்றன்று, ஆங்கில நன்மக்கள் அவ்வந் நாகரிக சாதியாரை வலிந்து பிடித்துவைத்துத் திருத்து கின்றவாறு போல, ஆரியருந் தமிழரைப்பிடித்துவைத்துத் திருத்தித் தம் பாஷையை அவர்க்கு அறிவுறுத்தினா ராகாரோவெனின் நன்று சொன் னாய் அவ்வாறாயின் ஆங்கில நன்மக்களாற் றிருத்தப்படும் அநாகரிக சாதியாரிடத்தில் அவ்வாங்கில பாஷையே வழங்கப் படுதல்போலத் தமிழ் முதுமக்களிடத்தும் அவ்வாரிய பாஷையே வழங்கப்படுதல்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/55&oldid=1574471" இலிருந்து மீள்விக்கப்பட்டது