உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

.

29

முணருந்தோறும், அங்ஙனம் இடர்ப்படாது எளிய முறையா லதனை வெளிப்படுக்கு நன்னெறி கடைப்பிடிக்கும் நோக்க முடையராயினார். அந்நோக்கம் நாளேற நாளேற முதிர்ந்து தங்கருத்தை ஒருவழிப்படுத்தலின் அவ்வப்போது தாங் குறிப்பிடும், பொருட்குணவிசேடம் பற்றி அவற்றிற்கெல்லாம் பெயர்களமைத்துப்பலவேறுபாஷைகள் பலவேறு காலங்களிற் பலவேறு மக்களாலியற்றி வழங்கப்படுகின்றன. எனவே, பாஷைஎன்பது மக்களாற் செய்துகொள்ளப் படுவதல்லது கடவுளராற் சிருட்டிக்கப்படுவதன் றென்பதூஉம், அங்ஙனம் அவராற் செய்துகொள்ளப் படுவதூஉம் பொருட் காரணம் பற்றி யியற்கையாகவே நிகழ்வதன்றிக் காரணம் பற்றாது செயற்கை யாகச் செய்துகொள்ளப் படுவதன் றென்பதூஉம், அப்பாஷைக ளியற்றப்படுவதற்கு முதற் காரணங்களாவன பிராணிகளின் ஒலிக்குறிப்பும் பொருள்களின் விசேட குணங்களும் ஆ ஒ முதலிய வியப் பிடைச்சொற்களும் சிறிய வாக்கியங்களுமா மென்பதூஉம் இனிது விளங்கும்.

இனி, ஒரு சாரார் தமிழ்மொழிக்கும் வடமொழிக்கு மெல்லாம் இலக்கணஞ் செய்து அவற்றை அகத்தியனார்க்கும் பாணினிமுனிவர்க்கும் உபதேசித்தருளினார் சிவபெருமான் என்று கூறுபவாகலான், பாஷைகளெல்லாம் மக்களாற் செய்து கொள்ளப்படுவனவேயாமென்று நியதிகொண்டு ரைத்தல் வழுவாம் பிறவெனின்; அறியாது கடாயினாய், செந்தமிழாரிய முதுமக்கள் தாம் இயல்பாகவே வழங்கிய மொழிவழக்கியல் வழிப்படுத்து இலக்கண நெறிவரம்பு கோலி மற்று அவை தம்மை இறைவனவர்க்குபதேசஞ்செய்ததல்லது தானே அதனைச்சிருட்டித்து உலகில் வழங்கப்படுத்தான் என்று யாண்டு முரைப்பக்காணாமையான் அவ்வாறு வினாதல் உலக நெறியொடு பொருந்தாத போலியுரையா மென்றொழிக. து கிடக்க. து

இனி, தமிழும் வடமொழியுமாகிய பாஷைகள் மக்களா லியல்பாகவேசெய்து கொள்ளப்பட்ட இருவேறு வகைப்பட்ட நெறிப்பாடுடையனவாம். அல்லதூஉம் அவையிரண்டனையும் வழங்கிய நன்மக்கள் இருவேறு தேயங்களி லிருந்தவர். தமிழர் இந்த இந்திய நாட்டிலிருந்தவர். ஆரியர் இவ்விந்திய நாட்டிற்கு வகுதூரத்திலுள்ள மத்திய மத்திய ஆசியாதேசத்திலிருந்தவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/54&oldid=1574470" இலிருந்து மீள்விக்கப்பட்டது