உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் 8 – 8

எளிதிற் கிடைப்பனவாகிய இவற்றைப் பிறரிடம் வேண்டாமை யான் அவரோடு உரையாடுதலும் வேண்டா வாயிற்று. அன்றி ஒரோவழித் தாங்கருதிய தொன்றனைப் பிறர்க்குப் புலப்படுத்தல் வேண்டினாராயின் முகங்கைகால் முதலியவற் றாலதனைக் குறிப்பிடுவர்; அக் குறிப்பாலும் விளங்காதாயின் தாங்குறித்த பொருளிலுள்ள ஒலிக் குறிப்பைத் தாமும் நிகழ்த்தி அவ்வாற்றா லதனை அவர்க்கு உணர்த்துவர்; தாம் ஏதாவது ஒன்றால் துன்புற்றாராயினும் இன்புற்றாரா யினும் அந்நிகழ்ச்சியைத் தம்முகக்குறிப்பால் அவர்க்கு உணர்த்துவர். இவ்வியல் பெல்லாம் ஓருதாரணத்தின் கண் வைத்து விளக்கிக்காட்டுதும். மூன்று வயதுள்ள ஒரு குழந்தை தன்கையில் அப்பம் வைத்துக் கொண்டு உண்ணுகையில் அதனை ஒரு காக்கை பற்றிக் கொண்டுபோயது; போக, அழுது கொண்டே தன் அம்மை யிடஞ்சென்று தன் கையையுங் காட்டி ஆகாயத்தையுங் காட்டிற்று; அக்குறிப்பையுந் தன் அம்மை அறியாளாக அது திரும்பவும் ‘மா! மா!' என்று அவளை அழைத்துத் தன் கையைக் காட்டிக் ‘கா - கா' என்று சொல்லி ஆகாயத்தையுங்காட்டிற்று. இங்ஙனங்காட்டவே, 'கா - கா’ என்று ஒலி செய்யுங்காக்கை அப்பத்தைப்பறித்துக்கொண்டு ஆகாயத்திற் சென்றதென்பதை அன்னை அறிந்து கொண்டனள். இதுபோலவே, அநாகரிக நிலையிலிருந்த மக்கள் தாங்கருதியதனைப் பிறர்க்கு இனிது அறிவுறுப்பா ராயினார். இன்னும், யாம் வேறு பாஷை வழங்கும் மக்களொடு பழகப் புகுங்கால் அவர் கூறுஞ் சிலசொற்களையும் சிறிய வாக்கியங் களையுங் கற்றுக்கொண்டு அவரோடு அளவளாய்ப் பேசும் போது தெரிந்தசொற்களாற் றெரிந்த பொருள்களை அறிவித்தலும், தெரிந்தவற்றை அறிவுறுக்கும் சொற்கள் தெரியாவிடங் களினெல்லாம் முகங்கை முதலியவற்றாற் குறிப்பிடுதலுஞ் செய்து போதரு கின்றோம். இருந்த வாற்றால் நாகரிக நிலையி லிருந்த மக்களெல் லாரும் வேறு பாஷைகற்கும் எம்மைப் போலவும், தன்குறிப்பு வெளிப்படுக்குங் குழந்தை போலவும் ஒழுகலாறுடைய இயல்பினரேயாமென்பது தெற்றென விளங்கும்.

னி இங்ஙனம் ஒழுகலாறுடைய அநாகரிக முதுமக்கள் ரோவழித்தங்கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தும் போ தெல்லாம் தாம்பெரிதும் இடர்ப்படுதலை உணருந்தோறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/53&oldid=1574469" இலிருந்து மீள்விக்கப்பட்டது