உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

27

யுடைமையே மக்கட்கு விசேட விலக்கணமாமென்பது உமக்குங் கருத்தாவதுபோலு மெனமறுக்க, நகையாடுதல், சமைத்துண்டல், கருவியைத்தொழிற்படுத்தல், சொற் சொல்லு தலாவது முதலியவும் பிறவுமாகிய எல்லாம் பகுத்துணர்ச்சியை யடியாகக் கொண்டே நிகழாதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமை யின், விலங்கினங்கட்கும் மக்கட் டொகுதிக்கும் வேறு பாடாவன முறையே பகுத்துணர்ச்சி யின்மையுண்மை யாமன்றிப் பிறி தில்லையெனவிடுக்க.

இனி, மக்களுக்குள்ள இப்பகுத்துணர்வுதானுங் காலஞ் செல்லச்செல்ல உடன்வளர்ந்து வருவதாயிற்று. ஆன்மாக்கள் படைப்புக்காலந் தொடங்கிப் புல் முதலிய தாவர தேகங்களி லிருந்து அறிவுவிளங்கப்பெற்றும், அதன்பின் சங்க மங்க ளாகிய விலங்கினங்களின் தேகங்களிலிருந்து அறிவு விளங்கப் பெற்றும் இவ்வாறே பகுத்துணர்ச்சி மிகவுடையராய்ப் போது கின்றனர். இங்ஙனம் இவரறிவு வளருந்தோறும் நாகரிகமும் உடன்வளர்ந்து வராநிற்கும். இவர் நாகரிகப் பெருக்க முறுந்தோறும் இவர்க்குவேண்டும் பொருள்களும் பலப் பலவாய், அப்பொருள்களை ஈட்டுதற்கு வேண்டுங் கருவிகளும் பலப்பலவாய்ப்பெருக்கமுறும். இனி நாகரிகம் பெருக்கமுறாத காலத்தே அவை அவ்வாறு பலவாக ப வேண்டப்படா. ஆன்மாக்கள் பிறசென்மங்களை ஒழித்து மானுடசென்ம மெய்தி அறிவுமிக விளங்கப்பெறாது அநாகரிக முற்றிருந்த காலத்தில் காய்கனி கிழங்கு முதலிய உண் பொருளையன்றி வேறுவேண்டாராய் மிருகங்களைப் போல் நாட் கழித்தனர். தற்கு, ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய கண்டங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கினராகிய மக்கள் உண்ணல் உறங்கல் இன்புறுதலையன்றி ஆடையுடுத்தலும் வேண்ட ராய்க் காலங்கழித்தலே தக்கசான்றாம். இக்கண்டங்களில் வசிக்குஞ் சில சாதியார்க்குப் பாஷைகளுங்கிடையா. எனவே, மிகவும் அநாகரிக முற்றிருந்த காலத்தில் உலகத்திலுள்ள எல்லா மக்கட்கும் பாஷை என்பது ஒரு சிறிதுங் கிடையாது. தாம் உணவுகொள்ளும் பொருட்டு வேண்டும் பழங்காய் கிழங்கு முதலியனவெல்லாம் மரங்களிலுங் கொடிகளிலுஞ் செடிகளிலும் பறித்துண்டுகளிப்பர். பருகுதற்கு நீர் மலையருவி களிலுங் கான்யாறுகளிலும் நீரோடைகளிலும் பெறுவர். இங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/52&oldid=1574468" இலிருந்து மீள்விக்கப்பட்டது