உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

சிலர்

கிரீன்லாண்டு

மறைமலையம் லயம் - 8

முதலிய

யுடைய ஆன்மாக்களுக்கு ஐம்பொறி யுணர்வோடு அவற்றைப் பகுத்துணரும் மனவுணர்ச்சியும், மிருகயாக்கை யெய்திய ஆன்மாக்களுக்கு அங்ஙனம் பகுத்துணர்தலின்றிப் பஞ்சேந்திரிய வுணர்வு மாத்திரையாகச் சேடித்தலுமேயா மென்பது இனிது விளங்கிற்று. இதுபற்றியே, ஆசிரியர் தொல்காப்பியனாரும் விலங்கினங்களுக்கெல்லாம் பஞ்சேந்திரிய வுணர்வு மாத்திரமே கூறி, மக்கட்பிறவியுடைய ஆன்மாக்களுக்கு அவற்றொடு மனவுணர்வுங்கூட்டி “மக்க “மக்கடாமே யாறறிவுயிரே” என்று ஓதியருளினாரென்பது. இந்நுண்மை தேறமாட்டாத ஆங்கில தத்துவ சாத்திரிகள் சிலர் மானுடர்நகைசெய்யும் விசே குணமுடையாரென்றும், வேறு சிலர் ஒருசாதிக்குரங்குகள் நகைத்தலானும் நகைக்க முயலுதலானும் அஃது அவர்க்கு விசேடகுணமாகமாட்டாதெனமறுத்து அவர் தீயிற் சமைத்து உணவுகொள்ளும் விசேடவியல்புடையாரென்றும் மற்றுஞ் தீவுகளிலுள்ள மக்கள் சமைத்துணவு கொள்ளக்காணாமையான் அதுவும் பொருந்தா தென மறுத்து அவர் கல்மரம் முதலியவற்றாற் கத்தி முதலிய கருவி செய்து அவற்றைப்பயன்படுத்தி வாழும் விசேட முயற்சியுடையா ரென்றும், வேறுபிறர் அதனினும் மக்கள் பண்டைக் காலந்தொட்டுச் சொற்சொல்லுஞ் சாதுரிய முடையராகக் காணப்படுதலால் அதுவே அவர்க்கு விசேட விலக்கணமாவ தென்றுங் கூறித் தம்மதம் நிறுத்துகின்றார். பறவையினங்களிற் சில கூடுகட்டுதற்குவேண்டுங்கருவிகள் கொணர்ந்து அவற்றைப் பயன்படுத்தக்காண்டலானும், கிளி, நாகணவாய்ப்புள் முதலியன சொற்சொல்லுஞ் சாதுரிய முடையமை எல்லாரானும் அறியப்படுதலானும் அவையும் அவர் கூறியவாறு மக்களுக்கே யுரிய விசேட குணங்களாக மாட்டா. அற்றன்று, அவைதாமே தமக்குவேண்டும் ஆயுத வகைகளைச் செய்து கொள்ள மாட்டாமைக்கும், அறிந்து சொற்சொல்லாமைக்கும் ஏதுவென்னையென்று ஆராயலுறு வார்க்கு அவற்றிற்குப் பகுத்துணர்ச்சியில்லாமை ஒன்றே காரணமாமென்பதூஉம் மக்களென்பாரவ்வாயு தவகைகளை அறிந்து செய்து பயன் கோடற்கும் உணர்வு மிகுந்து சொற்சொல்லுதற்கும் தாம் பகுத்துணர்ச்சியுடையராதல் ன்றே காரணமா மென்பதூஉம் இனிது விளங்குதலின், ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறு பகுத்துணர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/51&oldid=1574467" இலிருந்து மீள்விக்கப்பட்டது