உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

தமிழ் வடமொழியினின்று பிறந்ததாமா?

L

25

உலகமெங்கணும் பல்வேறுபட விரிந்துகிடக்கும் பாஷைகளையெல்லாம் ஒருங்கே தொகுத்து அவற்றினிலக் கணங்களை மிக நுண்ணிதாக அளந்து, அவை தம்முட் காணப்படும் ஒற்றுமை இலக்கணத்தானும் வேற்றுமை யிலக்கணத்தானும் அவற்றை 12 எழுபத்தாறுகூறாகப் பிரித்துக் கொண்டு பாஷாஞானவுண்மை புலப்படுக்கும் பிரபலதத்துவ சாத்திரபண்டிதர்களுக்கு, இங்ஙனம் ஒருவினா எழுப்புதலே மிகுந்த ஆச்சரியத்தை உண்டுபண்ணாநிற்கும். என்னை? தமிழ்மொழி ஒருவாற்றானும் வடமொழியோடு இயைபுடைய தன்றாகலான் வடமொழியை அதனோடினப்பட்ட வேறு சிலவற்றோடு உடன்சேர்த்து அவ்வாறு ஆக்கியும் அவரெல்லாம் ஆராய்ச்சிசெய்து வருகின்றாராகலின். இனித்தமிழ்மொழியில் ஆராய்ச்சிவல்ல பிரபல பண்டிதர்களும் தமிழ்மொழி சமஸ் கிருத பாஷையோடு ஒருவாற்றானும் ஓற்றுமையுறுதற்கு ஏலாத தனித்தியல் இலக்கணத்ததென்னும் உறுதிகொண்டு போதரு கின்றார். இஃதிவ்வாறாக, சமஸ்கிருதபாஷை ஒன்றே வல்ல சில பார்ப்பாரப்பண்டிதர் நியாயவுணர்ச்சியும் பொருளுண்மை யறியும் அறிவாற்றலு மிலராய் எல்லாப் பாஷைகளும் எங்கள் சமஸ்கிருத பாஷையிலிருந்துதாம் பிறந்தன என்றுரைத்து அபிமானம் பாராட்டுகின்றார். வழக்கொன்று இயையாது மறுதலைப்பட்ட இரண்டு வேறுபாஷைகளை ஒன்றெனப் பாராட்டுதல் நியாயவறிவு இல்லாதார் அபிமான முறையாம். இவ்வபிமான முறைகளாற் சமஸ்கிருத பாஷையினின்று பிறந்ததா மெனக்கூறும் சில ஆரியப்பண்டிதர் மயக்கவறிவின் பெற்றிகாட்டித் தமிழ் மொழியினுண்மை யிலக்கணங் கூறப் புகுந்தோமாதலால் இவ்வாறு தலையுரை குறித்திட்டோம்.

னிப்பாஷையின் உற்பத்திமுறையை ஒருசிறிது ஆராய வல்லார்க்கு ஒரு பாஷையிலிருந்து பிறிதொரு பாஷை பிறக்குமென்னும் வாதம் பொய்யாயொழிந்திடு மாகலின், அம்முறை ஈண்டு விரித்து அதனுண்மை நிலையிடுவாம்.

மானுடப் பிறவி எய்திய ஆன்மாக்களுக்கும் மிருக சென்மம் எய்திய ஆன்மாக்களுக்கும் வித்தியாசம் என்னை யென்று ஆராயப்புகுந்தவழி, மானுட யாக்கைப் பெருந்துணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/50&oldid=1574466" இலிருந்து மீள்விக்கப்பட்டது