உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் -8 8

தேகத்தைப் பல்வகை யுண்டிகளாற் போஷித்து அதன்வழியே கொண்டு போய் எமக்கு அறிவுவிளங்கச் செய்யும்பொருட்டுத் தான் கருணையான் எம் மகத்தே வைத்த பசித்தீயானது எம்மை வருத்த அதற்காற்றாது யாம் வாய் திறந்து அழஅதனைக்கண்டு அன்புடையளாகிய அன்னை எம்மை எடுத்துப் பாலூட்டி னாள். மிருகங்களோ தாம் பிறந்தவுடனே அங்ஙனந் தாயுதவியும் வேண்டாது தாமே யறிந்து தாய்முலை யுண்ணுகின்றன. இவ்வாறு மிருகங்களைக் காட்டினும் அறிவு விளங்கப்பெறாது கிடந்தாயாம், பயிற்சி வயத்தால் எம்மனம் சிறிது உலகவுருவத்தைப் பற்ற அதன் புறத்தேயிருந்த எம் ஆன்மவறிவு சிறிது விளங்கி, எமக்கு முலைதருவாள் ளென்றுசிறிது காலமெல்லாம் அறிந்து, அதன் பின் அங்ஙனந்தருவாளுந் தாயென்றறிந்து, அவள் அவ்வாறு தருதலும் பசியெடுத்து யாம் அழுதலா லென்று மறிந்து, அதன்பின் யாம் உண்ணுவதும் பால் என்று அவள் பன்முறை யுரைப்பதனாலறிந்து, அதன்பின் எம் அன்னை யையும் எம்மையும் போஷிப்பானெல்லாந் தந்தை யென்பது மவள் அறிவிப்ப அறிந்து இவ்வாறு முறைமுறையே எம்மறிவு விளங்கப்பெறுவோமாயினேம். இதனால், எமக்கு அறிவு விளங்குதற்கு ஏதுவாயிருந்த முதன்முயற்சி பசி ஒன்றேயாம் என்பதூஉம் இனிது பெறப்படும். இனி இங்ஙனம் அறிவுவளருந் தோறும் யாம் புதுவதாக அறிந்தது அறிவாகவும், முதலி லெழுந்த பழைய வறிவு எமக்கு அறியாமையாகவுங் காணப் பட்டன. இதுபற்றியே, ஆசிரியர் தெய்வப்புலமைத்

திருவள்ளுவநாயனார்,

“அறிதோற்றியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு”

என்று திருவாய் மலர்ந்தருளினார்.

-

இனியிங்னங்குழவிப்பருவ முதற்கொண்டு முறைமுறை யாய் எமக்கு அறிவு விளங்கப்பெறுவதே உலக வியற்கை. இவ்வியற்கைக்குமாறாக யாம் பத்துவயதில் அறியவேண்டுவன வற்றை முதல்வயதிலேயே ஒருங்கறிந்திடுவேமாயின், அங்ஙன மறிதல் இயற்கை தந்த வரமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/49&oldid=1574465" இலிருந்து மீள்விக்கப்பட்டது