உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

கிரகிக்கும்பொருட்டுக்

23

காணவுங் கருதவு முரைப்பவு மெல்லாம் எளிவந்தனவாக்கி வெளிவந்த சருவேசுரன் பெருங் கருணைத் திறத்தை அன்புநிறைந்த திப்பிய வுள்ளத்தோடு ஆராயலுறுவார்க்கு, அவ்விறைவன் நிட்களமும் சகளமும் சகள நிட்களமுமாகிய எல்லா நிலையும் எய்தவல்ல சருவ சத்தியுடையனாமென்பது நன்கு புலப்படும். இங்ஙனம் விரிவாயெடுத்துக்காட்டிய பிரமாண வருள்வாக்கியங்களையும், அந்தப் பிரமாண வருள்வாக்கியங்களாற் பெறப்பட்ட சத்திய வருட்கோல வியல்புகளையும் தேச சரிதங்களிற் பழகிய எந்த ஆங்கில நம்மக்கள் தாம் தழுவாது ஒழிவர்? அல்லதூஉம், மாறாக நடப்பன வொன்றுமில்லா மையால், அற்புதங்கள் நிகழ்ந்தனவென்றுரைத்தல் வெறும்

உலகவியற்கைக்கு

9

திரியும்

பொய்யேயாமென்று வாய்ப்பறை யறைந்து பிரமசமாசத்தார் இவற்றிற்கெல்லாம் யாது சொல்லவல்லார்?

இனி னி இங்ஙனந்தோன்றும் இறைவன் சகளவருட் கோலவியல்பு உணரமாட்டாது, அவை தம்மை "மனோ பாவனையா னிகழ்ந்த உருவெளித்தோற்றங்களாமென்பார் தெளிந்துறுதிகூடுமாறு இன்னும் ஒன்று காட்டுவாம். மானுடரென்பார் எக்காலத்தும் எவ்விடத்தும் ஒருவரோ

11

L

ாருவர் உறவு உரிமைபூண்டு வாழும் இயல்பினரேயாம். இவ்வாறு உறவுரிமைகொண்டு வாழு மியல்பினராகிய மக்கள் ஒருவரொருவரோடு அளவளாவி வாழும் முறையினால் அறிவு முதிர்ச்சியடைந்து உலகானுபவமும் ஈசுரவுணர்ச்சியு முடைய ராகின்றனர். அவ்வாறன்றி ஒவ்வொருவரும் பிறவி முதற் காண்டு அளவளாவுதலின்றித் தாந்தாம் தனித்திருந்து வளர்ந்துவருவராயின் அவரெல்லாம் அறிவு சிறிதுமிலராய் மிருகங்களைப்போல் உழன்று திரிவர். இதற்கு எமது குழந்தைப்பருவமே சிறந்த எடுத்துக்காட்டாம். யாம், தாய் வயிற்றை யகன்று வெளிப்பட்டகாலத்தில் எம்மறிவு ஒரு சிறிதும் விளங்காது கிடந்தேம். அங்ஙனங் கிடந்தகாலத்தில் எம்முடைய உள்ளமானது, உலகவுருவ வண்ணங்கள் பிரதி பலிக்கப்படாத நிர்மலமாகிய பளிங்குபோலவும் முத்திரை யிடப்படாத மெழுக்குருண்டை போலவும் இருந்தது. மன மென்னுங் கண்ணாடியில் அவை விளங்காது ஒழியவே, அக்கண்ணாடி யின் அப்பக்கத்தே யிருந்து அவற்றைக்காணும் ஆன்மாவும் அறிவுவிளக்கம் பெறாது கிடந்தது. அப்போது இறைவன் எமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/48&oldid=1574464" இலிருந்து மீள்விக்கப்பட்டது