உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

66

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீ ஜஞாநஸம்பந்தகுருப்யோநம

“வாழ்கவந்தணாவானவரானினம் வீழ்கதண்புனல்வேந்தனுமோங்குக ஆழ்கதீயதெலாமரனாமமே சூழ்கவையகமுந்துயர்தீர்கவே"

3. சைவமும் சைவர் நிலையும்

சிவபெருமானொருவனே

வழிபடற்

பாலனாகிய முழுமுதற்கடவுளென்றும் அங்ஙனம் அவனை வழிபடுவார்க்கு இன்றியமையா அடையாளங்களாவன விபூதி உருத்திராக்க தாரணமும் பஞ்சாக்கரமந்திரமுமேயாமென்றும், இவற்றை யெல்லாம் ஆன்மாக்கள் இனிதுணருமாறு சருக்கமாகவும் விரிவாகவுந் தெரிக்கலுறும் நூல்கள் வடமொழியில் வேத சிவாகமங்களுந் தென்மொழியில் தேவாரதிருவாசக முதலிய பன்னிரண்டு திருமுறைகளும் சிவஞான போத முதலிய பதினான்கு சித்தாந்த அருளோத்துக்களு மா மென்றும் ஆணைவரம்பு நிறுத்தி அவ்வரம்பு கடவாது ஒழுகும் நல்லான்மாக்களுக்கு முத்தியின்பம் பயப்பது சைவசமயமாம்; ங்ஙனங் கிளந்தெடுத்துக்கூறிய சைவசமய வழிநின்று அச்சமயவிதிகளை ள வழுவாது அனுட்டித்து ஒழுகுங் கடப்பாடுடை ய நன்மக்களெல்லாருஞ் சைவரென்று வேண்டப்படுவர்.

இனித்துரியப்பொருளாகிய சிவனை வழிபடுதலும்,

அவனடையாளங்களாகிய விபூதி உருத்திராக்கதாரணமும், இவற்றை யறிவிக்குந் தேவார திருவாசக முதலிய நூலாராய்ச்சி யுமாகிய மூன்றும் ஒன்றை ஒன்று இன்றியமையா நெறிப்பா டுடையனவாம்.

ங்கே சிவம் என்றதுரியப்பொருள் பிரமன் விண்டு உருத்திரன் என்று ஆண்டாண்டு உபநிடதங்களில் ஓதப்படும் முப்பொருள்களுள் இறுதியில் நின்ற உருத்திரபத வாச்சியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/66&oldid=1574482" இலிருந்து மீள்விக்கப்பட்டது