உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் 8 – 8

அவனரசனால் ஒறுக்கப்பட்டுச் சிறைக்களத்திடப்படுமாறு போலவும் சிவவழிபாடு இல்லாதானொருவன் அஃதுடை யானேபோல விபூதியுருத்திராக்கந் தரித்துப் பிறரை வஞ்சித்தன் மேற்கொண்டவழி அவன் தன் செயலையுணர் வாரெல்லா ரானும், ஓ! ஓ! இவன் கொடியன், பாவி, வஞ்சகன், என்று இழித்துக்கூறப்படுதன் மேலும் மறுமையிற் சிவபெருமானா லொறுக்கப்படுதலும் உடையனாம். சிவபெருமானைத் தெய்வ மாகக்கொண்டு வழிபடும் நற் குலத்திற் பிறந்த சைவர்களே! எம்மரிய சகோதரர்களே! நமக்கு இந்த மானுடதேகமும் அதனினுஞ்சிறந்த சைவகுலமும் முற்சென்மங்களில் ஈட்டிய பெருந்தவப்பயனா வாய்ப்பப் பெற்றும் அவற்றாற் பெறும் பயனை நாம் ஒரு சிறிதும் யோசியாது வாளாது வாணாளைக் கழித்தல் நன்றோ? நாம் வழிபடும் முழு முதற்கடவுள் சிவபெருமான் ஒருவனே என்று துணிந்து அவனை உபாசிக்கும் நன்முறை அறியோமாயின், நாம் எவ்வளவுதான் விபூதி,யுருத்தி ராக்கந்தரித்தாலும் அவற்றால் நமக்குப் பிரயோசனம் வருவதன்று. சிவபெரு மானை உபாசிக்கும் பொருட்டாகவே அவன்றிருவடையாளங் களான திருநீறுங் கண்டிகையும் அணிகின்றோமென்று அறிந்து அவனை வழிபட்டான் மாத்திரம் நாம் வேண்டியவாறெல்லாம் நமக்கு இம்மை மறுமைப்பயன்களை யருளியிறுதியில் அவன்றன் றிருவடிப் பேரின்பத்தையும் நமக்கு ஊட்டுவான்.

66

L

இனி, இங்ஙனங்கூறுதல் பற்றி நாம் ஏனைச்சமயங் களையும் அச்சமயிகள் வழிபடுந்தெய்வங்களையும் இகழ்ந் துரைக் கின்றோமென்று நினையாதீர்கள். அங்ஙனம் நாம் ஒரு காலத்துஞ் செய்யோம். நாம் முதற்சஞ்சிகையில் வரைந்த இவ்வுலகின் கட் பல்வேறுபடப் பரந்து கிடக்குஞ் சமயங் களெல்லாந் தம்மை அனுசரித்தொழுகும் ஆன்மாக்களின் பக்குவமுறைமைக் கேற்பவும், அப்பக்குவமுறைமையால் அவரறிவு விரிந்து செலுந்தன்மைக்கேற்பவுந் தாமும் ஒரு நெறிப்படாவாய்ப் பலநெறிப்பட அகன்று தாந்தாம் நுதலிய பொருளையே உண்மை யெனத் துணிந்து ஆராய்ந்து அவை தம்மா லுறுதிகொண்டு உய்யுநெறி தேடுகின்றன; இங்ஙனம் ஒன்றினொன்று மறுதலைப்பட்ட இலக்கணங்களுடைய வாயினும், ஒன்றி னொன்று குறைந்த குணங்களுடைய வாயினும், ஒன்றினொன்றுயர்ந்த குணங் களுடைய வாயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/69&oldid=1574485" இலிருந்து மீள்விக்கப்பட்டது