உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம்

லயம் – 8

சமயத்தை அனுசரித்தொழுகுங் கடப்பாடுடையார்க்குத் தஞ்சமயவரம்பு கடந்து சேறல் குற்றமன்றாம். இனி இவ்வா றெல்லாமன்றித் தஞ்சமயப் பொருளுண்மையும் பிறசமயப் பொருளுண்மையும் அளந்தறிய மாட்டாதபுருடர் தஞ்சமய வரம்புகடந்து விவகரித்தல் பெரியதோர்

அபசாரமா

மென்றொழிக. இனிச்சைவ சமயத்திற்பிறந்து சிவனைவழிபடும் புண்ணிய முடைய நன்மக்கள் அந்நெறிகடைப்பிடியாது தன்மனம் போனவா றெல்லாம் புகுந்து தம்பெருமையிழத்தல் நன்றன் றாம். சைவசமயிகள் சிவபெருமானையன்றி ஏனைச் சமயத் தெய்வங்களை உபாசிக்க இடம் பெறமாட்டார். இதற்கு ஸ்ரீமான், மாணிக்கவாசகசுவாமிகள் அருளிய,

“கொள்ளேன்புரந்தரன்மாலயன்வாழ்வுகுடி கெடினு

உன்ளேனின தடியாரொடல்லானரகம்புகினு

மெள்ளன்றிருவருளாலேயிருக்கப்பெறி னிறைவா வுள்ளேன்பிறதெய்வமுன்னையல்லா தெங்களுத்தமனே”

என்னுந் திருவாக் கேயுறுசான்றாமென்க.

இனிச் சிவபெருமானை உபாசிக்குஞ் சைவர்களுக்குச் சிவவாராதனை ஒன்றே சாலுமாகலின், விபூதியுருத்திராக்க தாரணமும் பிறவும் அவர்க்கு இன்றியமையாதாமென் றுரைத்தவா றென்னையெனின்; நன்று

வினாயினாய்,

கொழுநனையுடையளான மனைக்கிழத்திக்கு மங்கலநாண் முதலிய அடையாளங்களும், அரசுரிமையுடையனான ஓராண் மகனுக்கு அரதனமுடி முதலிய அடையாளங்களும் இன்றியமை யாது வேண்டப்படுகின்றனவாகலின், சிவனை உபாசிக்குஞ் சைவர்களுக்கு அவையும் இன்றியமையாது ன்றியமையாது வேண்டற் பாலனவேயாம்.

இனி ஒருதலைமகட்கும் ஓர் அரசற்கும் அவ்வவர்க்குரிய அன்பும் அதிகாரமுமே சாலுமாகவும், அவற்றின் வேறாக

யாளங்கள் பிறகோடறான் எற்றுக்கென்று ஆராய

லுறுவார்க்குத் தந்நிலையில் நின்றவழி உணர்வின்றிக்கிடந்த ஆன்மாக்கள் எழுவகைத் தோற்றத்துட்பட்ட சரீரங்களையும் அச்சரீரங்களிற்போகநுகர்ச்சிக்கு ஏதுவாய்க் கிடந்த மெய் வாய் கண் மூக்கு செவி முதலிய புறக்கருவிகளையும் மனஞ்சித்தம் புத்தியகங்காரமுதலிய அகக்கருவிகளையும் ஒருங்குதலைக்கூடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/71&oldid=1574487" இலிருந்து மீள்விக்கப்பட்டது