உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

47

த உலகத்தோடு ஒருமைப்பாடுற்று அறிவு விரியப்பெறு பவென்பதும், ங்ஙன தேகத்தோடு இயைபுறு தன்மாத்திரை யானே குறிவழிச்செல்லும் அறிவு முகிழ்க்கு மென்பதும் இனிது விளங்கும். குறியெனினும் அடையாளம் எனினும் ஒக்கும். னிமானுடரெல்லாரும் ஆண்பெண் எனப்பகுக்கப்படும் பகுப்புடைய ராதலும்அப்பகுப் பாருள்ளும் இவனெமக்குத் தந்தை இவன் சகோதரன் இவன் புதல்வன் இவன் ஏதிலான் இவன் நண்பன் எனவுணர்ச்சி வேறுபா டுறுதலும் அவ்வவர்க் குரிய விசேட அடையாளங்கள் பற்றியே யாம். இனி அப்பெண் வகுப்பாருள்ளும் இவள் எமக்குத்தாய் இவளுடன்பிறந்தாள் இவள் புதல்வி இவள் ஏதிலாள் இவள் கிழமையுடையாள் என்றற்றொடக்கத்தான் வேறுவேற்றிதலும் அவ்வவரிடைக் காணப்படும் விசேட அடையாளங்கள் பற்றியேயாம். இனி ஆங்கில நூலாரும் ஒரு பொருளொடு வேறொன்றனை ஒப்பிட்டுக்காண்டலானும், ஒன்றை ஒன்றின்வேறாகக் காண்டலானும் அறிவுமலர்ச்சி யுண்டாம் என்றுகூறுப. ஆகவே,

னி

உலகத்துட்டோன்றி அவ் வுலகியற் பொருளின்கண்

அதுவதுவாய்ப்பதியும் அறிவுடைய ஆன்மாக்கள் அடை யாளங்கள் பற்றியுணர்ச்சி யுடையராகப் பெறுதல் இயற்கை யாகவே வாராநின்ற நிகழ்ச்சி யாதலின், அது தன்னோடு முரணி வேறு வேறாசங்கித்தல் பொருத்த மின்றாம்.

னி இவ்வாறே ஒருவனைச் சைவனென்றும் ஒருவனை வைணவனென்றும்

ஒருவனைப் பௌத்தனென்றும் ஒருவனை சமணனென்றும் அறியும் அறிவெல்லாம் அவ் வவர்க்குரிய ஈசுரவழிபாடு கருமவுறைப்பு நூலாராய்ச்சி முதலிய அடையாளங்கள் பற்றியே நிகழ்வதல்லது பிறிதன் றாம். இனி அவரவர்க்குரிய சமய அடையாளங்களும் அவரவர்க் குயிர் போற் சிறந்தனவாய் அவர் செய்யும் ஈசுரவழி பாட்டின் கண் நெஞ்சம் நெகிழ்த்திப் பத்திச்சுவைமிகுவித்து மேம் பாடுறுவன வாம் இப்பெற்றியவான அவ்வடையாளங்கள் அவ்வச்சமயத்தா ரெல்லாரானுங் குறிக்கொண்டு போற்றப் படுவன வாதலின் சைவர்க்கு விபூதி யுருத்திராக்கதாரணம் இன்றியமையா யாளச்சிறப்பினவென்பது தெற்றென விளங்கும்.

வடை

இனி, வடமொழியில் வேதாகம நூலாராய்ச்சியுந் தென் மொழியில் தேவாரதிருவாசக சிவஞானபோத நூலாராய்ச்சியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/72&oldid=1574488" இலிருந்து மீள்விக்கப்பட்டது