உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

– 8

மறைமலையம் 8

வேண்டற்பாலவென்றலென்னை, விபூதியுருத் திராக்கந்தரித்து ஐந்தெழுத்தோதி யுண்மையன்பாற் சிவ வழிபாடு இயற்று தலொன்றே யமையுமெனின்; அற்றன்று, தாம்மாத்திரம் அங்ஙனம் வழிபட்டு உய்யுநெறியொன்றே கடைப்பிடித்தல் தன்னைப்பற்றுதலென்னுங் குற்றமாதன் மேலும் பிறசீவான் மாக்கள் பிழைத்துப்போம் மெய்ந்நெறி காட்டி வழிப்படுக்குஞ் கருணையின்றாய் முடிதலானும், கருணை யின்றாகவே சீலர்கட்குரிய ஏனைக்குற்றங்க ளெல்லாமும் ஒருங்குவந்து சேறலானும், அதனாற் பிறவி யறாமன் மேன்மேற்பெருகி வருதலானும் அவர்தாம் உண்மைச் சிவவழிபாடு செய்தாரல் லராவர்; இனித்தாமுய்யும் பொருட்டுச் சிவவழிபாடு இயற்றுதல் போலவே எல்லாச் வ சீவான்மாக்களும் உய்கவென்னுங் கருணைமிக்கு அவர்தமக் கெல்லாம் அச்சிவவழிபாட்டின் அருமை பெருமைகளை விரித்துரைத்து அறிவு கொளுத்தல் வேண்டுமாகலானும், அவ்வாறு அறிவுகொளுத்தற் பொருட்டுத் தம்முரையில் அவரைத் துணிபு ஒருப்படுத்தல் வேண்டுமாக லானும், அங்ஙனந் துணிபொருப்பாடு உறுவித்தற்கு வேதாகம நூலாராய்ச்சி இன்றியமையா நெறிப்பாடுடையதாம். அல்ல தூஉம், வேதாகமநூலுரைப்பொருள் செவ்விதின் ஆய்ந்து அவ்வாற்றான் முகிழ்க்கும் மெய்யறிவின் கட் பத்திச் சுவைத் தேன் ஓயாது சுரந்து இறைவன் றிருவடித்தியானத் தின்கண் மனவெழுச்சிமிகுக்கும் உரிமைப்பாடு விளைதலானும் அவ்வாராய்ச்சி தமக்கும் பயப்பாடு பெரிதுடைத்தாம். இருவழி யானுஞ்சிறந்த வடநூல் தென்னூலாராய்ச்சி சைவரெல்லா ரானும் ஒழுங்காகச் செயப்படுதல் வேண்டும். இங்ஙனம் மூவேறுவகைப்படுத்து எடுத்துக்கொண்ட சிவவழிபாடும் விபூதி யுருத்திராக்கதாரண பஞ்சாக்கரமந்திரமும் வேதாகமப் பொருணூலாராய்ச்சியும் சைவசமய நிலைக்குரியனவாம்.

சிவனை

இனி இக்காலத்து சைவர்களுட்சிலர் வழிபடுதலறியாராய்ச் 'சிவனென்னவிண்டுவென்ன, எல்லாம் ஒன்றுதான்’என்றுரைத்து அன்பிலராய் நாட்கழிக் கின்றார். வைணவசமயிகள் விண்டுவையே தாம் உபாசிக்கும் முழுமுதற் கடவுளென்று துணிந்து அவ்வாற்றான் வழிபடற் பாலார். சைவர் சிவனையே அங்ஙனந் துணிந்து வழிபடற் பாலார். இம்முறை திறம்பி இரண்டையு மொன்றெனக்கூறி அன்பிலராய் ஒழுகி நாட்கழித்தல்எந்தச்சமயிக்கும் நன்றாகாது. ஈசுர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/73&oldid=1574489" இலிருந்து மீள்விக்கப்பட்டது