உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

49

வழிபாட்டிற்கு ஒருதலையான் வேண்டும் உள்ள நெகிழ்ச்சி எல்லாத் தெய்வங் களையுஞ் சமமாகக்காணும் பொது நோக்கத்தான் வருவதன்று. மற்று அஃது, ஒருபொருளை னையவற்றினின்றும் வேறு பிரித்துத் தலைமைப்பாடுடைய தனக்காணுஞ் சிறப்பு நோக்கத்தான் வருவதொன்றாம் இவ்வியல்பு பற்றியே உலகெங்கும் பலவேறு வகைப்பட்ட சமயங்களும் சமயத் தெய்வங்களும் பலப்பலவாய் விரிந்தன. அவ்வச்சமயத்தாருந் தத்தமக்கு உள்ள நெகிழ்ச்சி செல்லும் வகையான் தாந்தாம் விரும்புங் குணங்குறிமுதலியன கொண்டு தத்தமக்கியைந்த வழியா னெல்லாம் ஈசுரனை உபாசனை செய்து போதருகின்றார். இவ்வாறு விரிந்த சமயங்களை யெல்லாம் ஒருமைப்படுத்தலாவது, அல்லாதவற்றை யெல்லாம் அழிவு செய் து மெய்ச்சமய மொன்றனை நிறுத்தலாவது யார்க்கும் இயல்வதன்று. அங்ஙனஞ் செய்தல் ஈசுரனுக்குத் திருவுள்ளமுமன்று, அவர்க்குத் திருவுள்ளமானால் கணத்திலவ்வெல்லாச்சமயங்களும் ஒருமைப்பாடுறு மன்றோ? ஆகலான் எல்லாச் சமயிகளுந் தத்தஞ்சாத்திர ஆணைவரம்பு கடவாது அவ்வச்சமயவிதிவழி யொழுகி அதனாலறிவு முதிர்ச்சியடைந்து மேன்மேற் சமயங்களிற் பிறந்து சித்தாந்த மாக நிலைபெறும் முடிநிலைச் சமயமொன்றால் நேரே ஈசுரன் றிருவடிப்பேரின்பமுத்தி பெறற்பாலார். இங்ஙனமின்றித் தஞ்சமயவரம்பு அழித்து அன்பிலராய் எல்லாம் ஒன்றுதான் எனக்கூறுதல் மக்கட் பிறவிப்பேறு இழப்பதொன்றாய்முடியும். அஃதுயாங்ஙனமோ வெனின்: பொருள்வேண்டி ஆடவர்பலர் தோள் முயங்கிக்கழித்த பொதுமகள் அவ்வாடவர் யாவரிடத்தும் அன்பிலளாம்; அன்பிலளாக வே இன்ப நுகர்ச்சியும்

ஒரு

அவட்கின்றாம். இனித்தா னின்பந்துய்த்தல் குறித்தாளாயின் அவள் தனக்கு இயைந் தானோர் ஆடவனை ஏனைஆடவரிற் சிறப்பக் கொண்டு அவன்மாட்டுக் கழிபெருங்காதலுடையளாய் ன்பந்துய்ப் பாளாவது. இன்னும் முத்துப் பவளம் நீலம் பச்சை கோமேதகம் புட்பராகம் வைடூரியம் மரகதம் மாணிக்கம் முதலிய நவமணிகளையும் ஆராய்ச்சி செய்தலு றுவான் அத் தொகுதிக் கண் நல்லதொன்று கண்டவழி அதனை னையவற்றினுஞ் சிறந்தெடுத்து அதன்கட் கழிபெருங் காதலுடையனாய் அதனைப்பொதிந்துவைத்துப் போற்றக் காண்கின்றோம். அங்ஙனமவற்றைப்பகுத்துக்காணும் அறிவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/74&oldid=1574490" இலிருந்து மீள்விக்கப்பட்டது