உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் லயம் – 8

மதுகையில்வழி அவனவற்றை ஒன்றுகூட்டி அவற்றின்கண் ஆசையிலனாய் ஒழுகுதலுங்காண்கின்றோம். இருந்தவாற்றால் அன்பென்னும் பன்னும் உள்ளநெகிழ்ச்சி யுண்டாதற்குப்பொது நோக்குக்கழித்துச் சிறப்பறிவு நோக்குக்கொளல்வேண்டுவது ஒருதலையாம். ஆகவே, சைவர்களாகிய நன்மக்கள் ஏனைச் சமயத்தெய்வங்களைக் கனவினும் நினைதற்கு படாராய்த்தான்கொழு னிடத்துக்கழிபெருங்காதலுடையளாய் இன்பந்துய்க்கும் மனைக்கிழத்திபோற் சிவபெருமானிடத்து அன்புநிகழப் பெற்று உபாசித்து உய்தல்வேண்டுமென்பது ஈண்டெடுத்துக் கூறியவாற்றா லினிதுவிளங்கும்.

ஒருப்

இனிச்சைவ நன்மக்களிற்சிலர் விபூதி யுருத்திராக்க பஞ்சாக்கர மந்திரமுதலிய திருவடையாளங்களின்றி ‘யாம் சிவவழிபாடு பெரிதுடையோமாகலான் எமக்கு அவ்வடை யாளங்கள் வேண்டா' என்றுரைக்கின்றார். அது பொருந்தா.

இனி வேறு சில சைவ நன்மக்கள் வேதாகமமுதலிய வடநூலாராய்ச்சியும் தேவாரதிருவாசக சிவஞான போதத் தென் நூலாராய்ச்சியும் அரியவாயிருத்தலின் அவற்றின்கண் எமக்கு மனவெழுச்சி சென்றிலது என்று கூறுகின்றார். வடநூலாராய்ச்சி யில்லாதொழியினுந் தமிழ் நுலாராய்ச்சி யேனுஞ் செய்து மென்றால் தமிழ் நூல்கள் செந்தமிழிலக்கண நெறி பிழையா நன்னடையில் எழுதப்பட்டிருத்தலால் அதன் கண்ணும் எமக்கு அறிவு சென்றிலது' என்றும் உரைக்கின்றார். நல்லதங்கைக்கதை’ நளன்கதை ராமன்கதை பாண்டவர் வர் கதை’முதலியன போல் அத்தனை இலேசாக வருத்தமின்றி அச்செந்தமிழ் நூல்கள் விளங்கற்பாலனவா? சிவபெருமான் திருவடிப்பேரின்பமுத்தி, கத்தரிக்காய், புடோலங்காய் முதலிய தாவரவுணவு கொள்ளுதலானும், யாம் சைவரென்று தருக்கிக் கூறுதலானும் எய்தும் எளிமைத்தன்று. அல்லாமலும், உலகவாழ்க்கைப் பெருந்துக்க சாகரத்தில் தம்மறிவுதேய்ந்து பெரிதுந்துயருழவாநிற்பவும் அதன்கண் எல்லாந் தமக்கு வருத்தம் இழையளவுந்தோன்றாது, இம்மை மறுமைப் பயன்றந்து உறுதிகூட்டும் ஞானநூலாராய்ச்சிக் கண் அவர்க்கு வருத்தந் தோன்றல் புண்ணிய முகிழ்ப்பு இல்லாக் குறைபாடாவ தன்றிப் பிறிதென்னை? விடியற் காலையில் உறக்க நீங்கி எழுந்து இரவில் துயில் கொள்ளு ரவில் துயில் கொள்ளு மளவும் மெய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/75&oldid=1574491" இலிருந்து மீள்விக்கப்பட்டது