உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

51

வியர்வரும்பக்கொல், தச்சு, நெசவு, உழவு, பொறைச்சுமை, பகடு உய்த்தன் முதலான அருந்தொழில் பலவியற்றிப் பொருள்சிறிது ஈட்டுதற்கண் நம்மனோர்க்கு வருத்தந்தோன்று தலில்லை; ஒரு நாழிகைப் போதேனும் நன்மக்கள் குழுவி லிருந்து ஞானநூலாராய்ச்சி செய்தற்கண் அவர்க்கு வருத்தம் மிகத்தோன்றா நிற்கும். பொய்யுரைத்தும், பொருளுடை யாரைக் கண்டால் அவருவக்கும் வகை இச்சகம் பேசியும், நல்லோர் பெரியோரைப் புறம்பழித்தும், கலகவுரை நிகழ்த்தியும், விதண்டைபேசியும், வீணுரை கிளந்தும் நாளொழித்தற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றாது; அரைநாழிகைப் போதேனும் ஈசுர விஷயமான நல்லுரை யுரைத்து ஆனந்த முறுதற்கண் அவர்க்கு வருத்த மிகத் தோன்றா நிற்கும். நாட்டு வளங்கள் பலகண்டும் பருவதக் காட்சிகள் பலகண்டும், வனங்களிற்சரித்து ஆண்டுள்ளன பலகண்டும், கடற்காட்சி கண்டு உலாப்போயும், நகரவித்தியா சாலைகள், அறங்கூறு அவையங்கள், தொழிற்சாலைகள், ஓவியச் சாலைகள், சிருங்காரத்தோட்டங்கள், அறச்சோற்று மண்டபங்கள், யாவையுமலிந்த ஆவண வீதிகள் முதலான வருந்தித் திரிந்துகண்டும் நாட்கழித்தற்கண் நம்மனோர்க்குப் பிரயாசை தோன்றாது; நல்லறிவுடையோரைக் கண்டு அவரோடு அளவளாவுதற்கண்ணுந் தேவாலயங்களு க் கு ச் சென்று

ஈசுரன்றிருவுருவத்தைக் கண்ணாரக்கண்டு களிப்பதன் கண்னும் அவர்க்குப் பிரயாசை மிகத் தோன்றா நிற்கும் புளுகுரை கேட்டும் புறம்பழிப்புரைகேட்டும் வம்புரைகேட்டும் வாதுரை கேட்டும் வாளாது நாட்கழித்தற்கண் நம்மனோர்க்கு மகிழ்ச்சிமிகத்தோன்றாநிற்கும், பெரியோர்சொல் நீதியுரையும் கேட்டற்கண் அவர்க்கு இகழ்ச்சிமிகத்தோன்றா நிற்கும். என்னே! என்னே! நம்மனோர் செயலிருந்தவாறு! ஆரிய நன்மக்களே! எம்மரிய சகோதரர்களே! சைவசமய அன்பர்களே! இனியேனும் இங்ஙனம் நாட்கழியாது ஞான நூலாராய்ச்சி செய்து கஷ்டமாயின், அவ்வாராய்ச்சிமுதிர்ந்த நல்லோரைக் கூட்டி அவருபதேசிக்கும் நல்விஷயங்களைச் செவிமடுத்துப் பிழைக்குநெறி தேடுங்கள்! ‘முயற்சியுடை யா ரிகழ்ச்சி யடை யார்’ என்னும் ஔவைப்பிராட்டியார் அருள் வாக்கிய உபதேசத்தை ஞாபகத்தில் வையுங்கள்!

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/76&oldid=1574492" இலிருந்து மீள்விக்கப்பட்டது