உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

66

4. ஞானசாகரம்

காகமுறவுலகந் துண்ணக்கண்டீர கண்டாகார சிவ

போகமெனும் பேரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய் ஏகவுருவாய்க்கிடக்குதையோ வின்புற்றிடநாமினி யெடுத்த தேகம் விழுமுன்புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

காப்பியம்

திருச்சிற்றம்பலம்.

காப்பியமாவது கவிஞனாற் செய்யப்பட்ட செய்யுள், வகரபகரவொற்றுமை பற்றித் திவ்யம் என்பது திப்பியம் எனவழங்கப்படுதல் போலக் கவியாற் செய்யப்பட்டது என்னும் பொருளுடை ய காவ்யம் என்னுந் தத்திதாந்தபதமும் காப்பியம் என வழங்கப்பட்டது. சேற்றிற் பிறந்தது என்னும் பொருளுடையதாயினும் பங்கயம் என்பது ஆம்பல் முதலிய வற்றிற்குச் செல்லாது தாமரை ஒன்றினையே உணர்த்து மாறுபோலக் காப்பியம் என்பதும் பொருட் டொடர் நிலைச்செய்யுள் ஒன்றினையே உணர்த்தி நிற்கின்றது.

என

இதுவும் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் இருவகைப்படும். இவற்றுள்ளே பெருங்காப்பியமாவது வாழ்த்து வணக்கம் வஸ்து நீர்த்தேசம் என்னும் மூன்றனுள்ளே ஒன்றினை முன்னுடையதாய், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருள்களையும் பயப்பது வாய், அழகு, புகழ், ஆண்மை, ஆக்கம், கொடை, குலம் முதலியன வமைந்த ஒரு தலைவனையுடையதாய், நாடு நகரம் முதலியவைகளையும், விவாகம், முடிசூட்டு முதலியவை களையும், மந்திரம், தூது முதலியவைகளையும் சொற்சுவை பொருட்சுவைகளும் பிறவும் அமையுமாறு வர்ணித்துச் சொல்லுவதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/77&oldid=1574493" இலிருந்து மீள்விக்கப்பட்டது