உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

ஞானசாகரம்

53

ப்பெருங்காப்பியத்தின் இலக்கணம் வடமொழியிலே அலங்காரகாரர்களாகிய விசுவநாதபண்டிதர், போசதேவர், தண்டியாசிரியர் முதலியோரால் விரித்துக் கூறப்பட்டிருக் கின்றது. தமிழ்த்தண்டியலங்காரத்திலுங் கூறப்பட்டிருக் கின்றது. விசுவநாத பண்டிதர் பெருங்காப்பியத்திற்கு மகா வாக்கியம் எனவும் பெயர் கூறுவர். வடமொழியிலே சிசுபாலவதம் என்னுங் காப்பியம் இவ்விலக்கணங்களெல் லாம் பரியாப்தி யாயமைந்த பெருங்காப்பியம் என்பர். அங்கே பொழில் விளையாட்டு, புனல் விளையாட்டு முதலிய வெல்லாந் தனித்தனி ஒவ்வொரு சருக்கங்களாற் கூறப்பட்டன. தென் மொழியிலே சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் முதலியவை களைப் பெருங்காப்பியம் என்பர். மலை வருணனை, நதி வருணனை முதலிய வருணனைகளுள்ளே கூறப் படாததுவும் பெருங்காப்பியமென்றே கொள்ளப்படும், அறம் முதலியன கூறாதொழிதற்பாலனவல்ல.

சில

சிறு காப்பியமாவது அறம் முதலியவைகளுள்ளே சில கூறப்படாமல் வருமியல்புடையதாம். கலம்பகம், பரணி, உலா முதலிய பிரபந்தங்களெல்லாம் சிறு காப்பியம் என்பர்.

இவ்விலக்கணமுடைய காப்பியங்களும் சொற்குற்றம், வாக்கியக்குற்றம், வாக்கியப் பொருட்குற்றம் என்னும் மூவகைக்குற்றங்களும் இல்லாதனவாய் இருத்தல் வேண்டும் என்றும், இக்குற்றங்களுந் தனித்தனி பதினாறு வகைப்படும்

பற்றாததுவே காப்பியம் என்று மதிக்கப்படும் என்றும் போசதேவர் கூறுவர். அக்குற்றங்களுள்ளே பல நன்னூலாருந் தொல்காப்பியனாருங் கூறிய நூற்குற்றங்களுள்ளே அடங்கும். அவற்றுட் சில கூறுதும்.

1. அப்பிரயுக்தம் சொற்குற்றம் பதினாறனுள் ஒன்று, அது, முன்னொரு காலும் நற்புலவராற் கொள்ளப்படாத சொற்பிரயோகமுடையது. இது தொல்காப்பியர் கூறிய “பழித்தமொழியா னிழுக்கம்கூறல்” என்பதன் பாலடங்கும்.

2. கட்டம் - சொற்குற்றம் பதினாறனுள் ஒன்று; அஃது அடிகள் நிறையும்படி சேர்க்கப்பட்ட வீண்சொற்களுடையது; தொல்காப்பியர் கூறிய “பொருளிலமொழிதல்” என்பதன் பாலடங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/78&oldid=1574494" இலிருந்து மீள்விக்கப்பட்டது