உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் 8 – 8

4. நேயார்த்தம் - இதுவும் அப்பதினாறனுள் ஒன்று; அது, கவியின் சங்கே தமானபொருளுடையது; தொல்காப்பியர் கூறிய “தன்னானொருபொருள் கருதிக்கூறல்” என்பதன் பாலடங்கும்.

5. அபுட்டார்த்தகம் - இதுவும் அப்பதினாறனுள் ஒன்று; அது, ஓரற்பச் சொல்லினாலே அறியத்தக்கபொருளை அறிவிக்கும் வெகுசொற் பிரயோகமுடையது.

6. அப்பிரதீதம் இதுவும் அப்பதினாறனுள் ஒன்று; வேறுமத சாத்திரமின்றி அறியப்படாத சொல்லுடை

யது.

இவை முதலிய சொற்குற்றங்களும், வாக்கியக் குற்றங்களும், பிறவுஞ் செய்யுள்களிலே வருமாயின், அவை, நற்புலவரால் அங்கீகரிக்கப்படா தனவேயாம், வாக்கியமாவது தகுதி, அவாய்நிலை, அண்மை என்பவற்றோடுகூடிய சொற் கூட்டம், காப்பியவிலக்கணமமைய வந்தவருணனை என்பதறி யார் வீண்வார்த்தையென்பர். சமயம் நேர்ந்துழிக் குற்றங்களும், பிறவும் விரித்துக் கூறப்படும்.

குழவிப்பருவத்தே

சகளோபாசனை

அ. குமாரசுவாமிப்பிள்ளை.

தலை ஆன்றோர் தெய்வீகம் என்று தம்முள்வழங்குவர். மேலும், உலகானுபவவுணர்ச்சியும், அவ்வுணர்ச்சியில்லாமை யாற் பாவனைசெய்யுஞ் சக்தியும் வாய்ப்பப் பெறாத எமது யாம் அற்புதமாகிய நவீன கோல மொன்றைக் கண்டு அதன் சொரூபத்தைப் பொருள் விழுப்பந் தோன்றப் பலவாறு வருணித்துச் செய்யுட்களானும் பிரபல பிரமாண வுரைகளானும் விரித்து உபந்நியாசஞ் செய்திடுவே மாயின், அதனைப் பொய்யென்றும் பாவனையென்றும் உருவெளித் தோற்றமென்றும் யாரேனுஞ்சொல்ல ஒருப்படு வரோ? ஒரு காலத்தும் ஓரிடத்தும் ஒருப்படவேமாட்டார். இங்ஙனம் எமது செந்தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரும்பேரற்புத ெ மான்றனை எடுத்துக்காட்டி நிறுவி, அவ்வாற்றாற் சகளோபாசனைச் சன்மார்க்க முறையின் உண்மைத்தன்மை காட்டுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/79&oldid=1574495" இலிருந்து மீள்விக்கப்பட்டது