உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

55

சீகாழியென்னுந் திப்பியதலத்திற் சிவபாதவிருதய ரெனும் பிராமணப்பெரியர் ஒருவர் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு வருடங்களுக்கு முன் இருந்தார். அக்காலத்திற் சமணசமயிகள் யாண்டும் விருத்தியடைந்து வந்தனர். அச்சமண சமயிகள் கொல்லாமை முதற்சிறந்த இலெளகிக தருமங்களைப் பிறழா மனவெழுச்சியுடன் அனுட்டித்து, அங்ஙனந்தாம் அனுட்டிக்கும் அச்சிறந்ததரும மேம்பாட்டைச் சாதாரண சனங்கட்கு உபந்நியசித்து அவர்க்கெல்லாம் உள்ளக்கவர்ச்சியை எழுப்பி அவ்வாற்றாலவரைத் தம்மதத் திற்குத் திருப்பிக் காண்டு செல்வாராயினார். இங்ஙனஞ் சிலநாளெல்லாஞ் செல்ல அச்சமணசமயம் யாண்டும்பரந்து விரிவதாயிற்று. தற்சமயம் இவ்வாறு விருத்தியடையவே மற்றைச் சமயங்களை அனுசரித்தொழுகுவோர் தொகை சுருங்குவதாயிற்று. சமணம் பௌத்தம் முதலிய அச்சமயங் களையொழித்து ஒழிந்த சைவம், வைரவம், பாசுபதம், சாத்தேயம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய சமயங்க ளெல்லாம் தெய்வம் ஒன்றுண்டெனக் கொண்டு வழிபடும் ஆத்திகசமயங்களாம். சமணம் பௌத்தம் என்பனவோ இலௌகிக தருமங்களிற் சிறந்தன சில அனுட்டித்து ஒழுகும் அம்மாத்திரையே யல்லது, அவை தெய்வம் ஒன்று உண்டெனக் கொண்டு வழிபடும் ஆத்திக சமயங்களல்லவாம். மற்று அவை தெய்வ மில்லென்று உரைக்கும் நாத்திக சமயங்களேயாம். இவ்வுண்மை தேற மாட்டாத ஆங்கிலதத்துவ சாத்திரிகள்சிலர் கௌதமர், ஈசுரவழிபாட்டைக் குறிப்பிட்டாயினும், ஈசுரனைக் குறிப்பிட் டாயினும் யாதும் உரையாமைபற்றி அவரை நாத்திகரெனக் கூறுதலமையாது, அவர் ஆத்திகருமாகலான் என்று உரைத்து இழுக்குறுகின்றார். பண்டிதர் மாக்ஸ்மூலர் பௌத்தமுனி ஆன்மாவையும் பரமான்வையும் பரமான்வையும் மறுத்து ரைக்குஞ் சுதந்திரநிலையைச் சாங்கிய நூலார் தந்திட்டார்” எனவும் “பௌத்தசமயநூல்கள் பலவும் நிரீசுரவாதம் நிலையிட்டு ரைப்பனவாம்” எனவுங் கூறுதலானும், பிராஞ்சு தேயத்துத் தத்துவசாத்திர விற்பன்னராகிய டாக்டர் பார்த் என்பவர் “பௌத்தகுருவின் கோட்பாடு ஒருதலையாக நிரீசுரவாதம் போதிப்பதுவாம்' எனத் துணிவுதோன்றக் காட்டுதலானும், பிரபல ஆராய்ச்சிசெய்து வடமொழி நூலுரைவரலாறு புதுவதாக எழுதிவெளியிட்ட மாக் னல் பண்டிதரும்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/80&oldid=1574496" இலிருந்து மீள்விக்கப்பட்டது