உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் 8 – 8

நாத்திக

“பௌத்தமும் சமணமும் சாங்கிய நூலைப் போலவே ஈசுரனிருப்பை நிராகரிக்குங் கோட்பாடுடைய வாம்” என்று அங்ஙனமே துணிபு ஒருப்படுத்தலானும், சிவஞான போதம் சிவஞானசித்தியார் முதலிய தத்துவ முழு முதற்றமிழ் நூலுரைகளின் கண்ணும் அவ்வாறே அவர் சமயிகளென்று வைத்து மறுக்கப்படுதலானும் பௌத்தரும் சமணருமாகிய அவ்விருவகைச் சமயிகளும் நாத்திகசமயிகளே யாமென்பது ஒருதலையென்றுணர்க. இங்ஙனம் நிரீசு ரவாத மேற்கொண்டு ஒழுகுவாராகிய சமணசமயிகள், ஈசுரனை உண்மையன்பான் வழிபடும் ஏனை ஆத்திக சமயிகளை வருத்தத்தொடங்கினார். தன் கட்டளை யாற் சட்டதிட்டங் களேற்படுத்தி அவற்றிற்கேற்ப ஒழுகு வார்க்கு நன்மையும், அவற்றிற்கு ஏலாதன செய்தொழுகு வார்க்குத் தண்டனையுந் தந்து நெறிப்படுத்துவானாகிய அரசனை யில்லாத குடிகள் தாந்தாம் விரும்பியவாறே சில சட்ட திட்டங்களேற்படுத்திக் கோடலும், தமக்கு அவை இணங்காத வேறு காலங்களில் தம் முன்னை விதிகளை மனம்போனவாறு புரட்டி வேறுவேறு இயற்றிக்கொண்டு தம்முட் கலகம் விளைத்தலும் நிகழக் காண்கின்றோம். இதுபோல, ஈசுரனொருவன் உண்டெனக் காண்டு அவன் கட்டளை யிட்டருளிய நற்கருமங்களைச் செய்யின் நன்றாம், அவன் வேண்டாமென்று விலக்கிய தீக்கருமங்களைச் செய்யின் தீதாம் என்னும் மனவுறைப்பில்லாத நாத்திக சமயிகள் தாம் ஒரோ வொருகாலங்களிற் சில இலௌகிக தருமங்களை நெறி பிறழாது அனுட்டிக்க உடன்படுவா ராயினும், தமக்கு அத்தரு மங்களியையாத பிறகாலங்களில் தாந்தாம் விரும்பியவாறே முன்னைத்தரும வரம்பழித்துத் தீயகருமங்கள் நிகழ்த்துந் துணிவுடையாராவர். இங்ஙனமே, சமணசமயிகள் அக் காலத்துத் தம்மோடு ஒருங்கு இருந்த சைவர், வைரவர், பாசுபதர் முதலிய ஆத்திகவைதிக சமயிகளுக்குப் பெருந் தீது செய்யும் வஞ்சனை பலவுடைய ராயினார். திருநாவுக்கரசு சுவாமிகள் சமணசமயந்துறந்து சைவசமயந்தழுவிய காலத்திற் சமண ரொருங்குகூடித் தம் மரசனால் அவரை நீற்றறையில் இடுவித்தும், கல்லிற்கட்டிக் கடலில் வீழ்த்தியும், யானைக் காலில் இடறுவித்தும், நஞ்சம் உண்பித்தும் புரிந்த தீதுகள் நம்மேற்கோளை இனிது நிறுத்தும் பிரமாணங்களாமன்றோ? சாந்தருணத்திற்கு ஓர் உறையுளாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/81&oldid=1574497" இலிருந்து மீள்விக்கப்பட்டது