உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

57

விளங்கிய அப்பமூர்த்திகள் தாம் சமணராற்பட்ட கட்டங் களைத் தாமே தந்திருப்பதிகங் களிலாங்காங்குக் குறிப்பிடு மாறுங்காண்க. இவ்வாறே, அவர்கள் தங்காலத்திருந்த பாண்டியனை யுள்ளிட்ட முடிவேந்தர்களையெல்லாந் தஞ் சமயங்களிற்றிருப்பி, அவ்வரசர் செல்வாக்கால் ஏனை ஆத்திக சமயிகள் வழிபடுந்தேவாலயங்களை அடைப்பித்தும், மடா லயங்களில் தீக்கொளுவியும், அவரைக்கண்டால் 'கண்டு முட்டு' என்றும், அவரைக்குறித்து ஏதேனுங்கேட்டால் 'கேட்டு முட்டு' என்றும் பலவாறு இன்னலியற்றி வந்தனர். இங்ஙனஞ் செய்து போந்த சமணர்கள் கொல்லாமைமுதற் சிறந்த தருமங்களை மேற்கொண்டு ஒழுகினாரெனல் யாங்ஙனம்? ஆகவே, இவ்வாறெல்லாந் தீதுபுரியும் ஒழுக லாறுடைய ரானசமணர் யாண்டும் பரவி நிரம்புதலும், சைவ சமயிகள் தீயினால் வளைக்கப்பட்டு இடையிற் கிடந்து துடிக்கும் புழுப்போற் பெரியதோர் இடருழவா நின்றார். அக்காலத்திற் சிவ பெருமானிடத்து உண்மையன்புடையரான சிவபாத விருதயர் என்னும் அந்தச் சைவவேதியர் தீயரான சமணரொழி யவுஞ் சைவம் யாண்டும் பரந்து பிரகாசிக்கவுஞ் செய்யவல்ல தெய்வத்தன்மையுடைய மகப்பேறு தமக்குச் சித்திக்குமாறு தவங்கிடந்தார். அவர்க்குச் சிலநாட்களி னெல்லாம் ஓராண் மகப்பேறு சித்தித்தது. அவ்வாண்மகவுக்கு மூன்றுவயது செல்கின்றகாலத்தில் சிவபாதவிருதயர் என்றும் போல அச்சீகாழி நகரிலுள்ள சிவாலயதடாகத்தில் தம் நித்திய கருமங் களை முடிக்க வீட்டிலிருந்து புறம் போதுவார், சிறு குழந்தை யாயிருக்கும் அப்பிள்ளையாரும் அழுது பின்றொடர்தலைக் கண்டு பலவாறு சமாதனவுரைகள் சொல்லி யிருத்தியுங் கேளாமல்வர, வருகவென்று உடன் அழைத்துச் செல்வாராயினர். சென்று தடாகக்கரை சேர்ந்து அக்கரையின்மேல் பிள்ளையாரை யிருக்கச்செய்து, தாம் நீரிலிறங்கி நீர்க்குள் மூழ்கியிருந்து அகமருஷணம் என்னுங் கருமத்தைச் செய்வாராயினர். அங்ஙனந்தந்தை யார் நீருக்குள் மூழ்கி நெடுநேரமிருப்பவே, அவரைக்காணப் பெறாத பிள்ளையார் அம்மே! அப்பா! என்று கூவி அழத்தொடங்கினார். அவ்வழுகையைக்கண்டு மனம் பொறாராகி ஆலயத்தில் எழுந்தருளியிருக்குஞ் சிவபெருமானும் உமைப்பிராட்டி யாரும் பிள்ளையாரிடம் போந்து அவரழுகை தீர்த்துக்

காண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/82&oldid=1574498" இலிருந்து மீள்விக்கப்பட்டது