உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் 8 - 8

கண்ணீர் துடைத்து அம்மையார் தங்குமிழ் முலையிற் கொழும்பால் கறந்து அதிற் சிவஞானங்குழைத்துப் பொற் கிண்ணத்தா லூட்டவும் அப்பனார் அவரழுகை தீரத்தடவி இன்

ன்சொற் சொல்லவும்பிள்ளையார் பொற்கிண்ணத்திற் பாலுண்ட வண்ணமாய் மகிழ்ச்சியுற்றிருந்தார். இதற்குள் நீரில் முழுகியிருந்த தந்தையார் ஆண்டுத்தாஞ் செயற்பால வான கருமங்களை இனிது முடித்துக் கரையேறி வந்து பிள்ளையார் கையிற் பொற்கிண்ணம் வைத்திருத்தலும் அவர் உடம்பெல் லாம் பால்வழிந்திருத்தலுங்கண்டு வெகுண்டு “அடா! நீயார் தந்த பாலை யுண்டாய்? உனக்கு எச்சின் மயங்கப் பாலூட்டினாரைக் காட்டுக" என்று உரப்பிக் என்று உரப்பிக் கையில் ஒரு சிறுகோல் எடுத்துக் கொண்டு கேட்டார். கேட்டலும், பிள்ளையார் அஞ்சி எனக்குப் பாலூட்டினார் இதோ! மழவிடையமர்ந்த பெருமானும் பிராட்டியாருமாம் என்று

சுட்டி,

"தோடுடைய செவியன் விடையேறியொர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடிபூசியென்னுள்ளங்கவர்கள்வ னேடுடையமலரான் முனைநாட்பணிந்தேத்த வருள்செய்த பீடுடையபிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே

என்று கட்டளையிட்டருளினார்.

இவ்வரலாறு, டாக்டர் ஹூல்ஸ் முதலான ஐரோப்பிய விற்பன்னர்களும் உண்மையாமெனக்கொண்டு தம்மாராய்ச் சாதனமாகத்தழுவும் பரிய புராணத்தின் கண் விரிவாக எழுதப்பட்டிருத்தல் கண்டுணர்க.

சிக்கு

இன்றியமையாச்

இனி, உலகானுபவவுணர்ச்சியும் பாவனை செய்யும் சக்தியும் வாய்ப்பப்பெறாத குழந்தைப்பருவத்தினராகிய ஞான சம்பந்தப்பிள்ளையார்க்கு எதிரே இறைவன் அவர்க்கு அனுக்கிரககிக்கும் பொருட்டுத் தாங்கி எழுந்தருளிய சகள மங்கள அருட்கோலங்கள், உருவெளித்தோற்றம்போற் பொய்யாய் ஒழிந்திடுமென்றல் யாங்ஙனம்? அல்லதூஉம் மூன்றுவயது செல்கின்ற அக்காலத்திலே செந்தமிழ்ச் சுவையுந் தத்துவ நுட்பமும் பொதுளத் 'தோடுடைய செவியன்’ என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளியது தான் என்னை? சிற்றறிவுஞ் சிறிதொழிலுமுடையேமாகிய எம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/83&oldid=1574499" இலிருந்து மீள்விக்கப்பட்டது