உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

59

குழந்தைகள் மூன்றுவயது செல்கின்ற அக்காலத்திலே தான் மழலைமொழிகள் சிலவுரைத்து எம்மையெல்லாம் உவப்பிக்கின்றன; அக்காலத்திலே தான் தளர்ந்து தளர்ந்து நடந்துசெல்லுகின்றன; அக்காலத்திலேதான்

அம்மே

என்றும் ‘அப்பா' என்றும் ‘சேச்சி’ என்றும் 'பாச்சி' யென்றுந் தமக்கு வேண்டும் பொருள்களைச் சுட்டுகின்றன; அக்காலத்திலே தெய்வம் உண்டு என்னும் உணர்ச்சி அவைகட்கு இன்றாம். அத்தெய்வமுஞ் சிவபெருமானேயா மென்னு முணர்ச்சியு மின்றாம்; அச்சிவபெருமான் றிருத்தேவியார் உமை என்னும் உணர்ச்சியுமின்றாம்; அச்சிவன்

மன்

றிருவடை யாளங்கள் தோடு’ விடை 'கொன்றை’ முதலியவா மென்னும் ஆராய்ச்சியு மின்றாம்; ஆதலின், இவ்வுணர்ச்சி வேறுபாடெல்லாம் நிகழ்ந்ததற்குப் பரிகாரம் வேண்டுமெனின், அற்றன்று; சிவபாத விருதயரென்னுந் தந்தையார் சிவபெருமானிடத்துமிக்க அன்புடையா ரென்பது பெறப்படுதலால் அவர் கிருகத்திலே சிவனை வழுத்துகின்ற காலங்களிற் சொல்லுஞ் சொற்களின் பொருள்கள் மிகத் தெளிவாகிய அப்பிள்ளையார் மூளையிற் பதிந்திருந்து பின்னொருநாட் புறம்போந்தன வென்பார்க்கு, அங்ஙனம் அவ்வுணர்வு மாத்திரமே புறம்படுதல் பொருந்து வதாமன்றி அம்மையார் தமக்குப் பொன்வள்ளத்திற் பால்கறந்து ஊட்டினாரென்றலும், அதுகண்டு தந்தையார் சிவபாத விருதயர் வெகுண்டு தம்மை வினாவியபோது இறைவனையும் இறைவியையுஞ் சுட்டிக்கட்டித் திருப்பதிகங் கட்டளை யிட்டருளினாரென்றலும் பிறவும் பொருந்துமாறு போதரா மையின் அவர் கூற்றுப்போலியாமென்று மறுக்க. அற்றேல் அஃதாக, "தோடுடைய' என்னும் அத்திருப்பதிகத்திற் பிள்ளையார் தமக்கு இறைவி அங்ஙனம் பொற்கிண்ணத்திற் பால்கறந்தூட்டினாளென்றும், சிவபாதவிருதயர் அஃதுணரா மற்றம்மை வெகுண்டு வினாவியபோது இறைவனையும்

றைவியையுந் தாஞ்சுட்டிக்காட்டினாரென்றும் ஓதிற்றில ரெனத் திருவனந்தபுரத்திற் பிரபல ஆங்கில தத்துவசாத்திர விற்பன்னராயிருந்த சுந்தரம்பிள்ளை கூறினாராலெனின், அவர் அறியாது அங்ஙனங் கூறினார், மண்ணினல்ல வண்ணம்"

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/84&oldid=1574500" இலிருந்து மீள்விக்கப்பட்டது