உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் லயம் – 8

“போதையார் பொற்கிண்ணத்தடிசில்பொல்லாதெனத் தாதையார்முனிவுறத் தானெனையாண்டவன் காதையார் குழையினன்கழுமலவளநகர்ப் பேதையாளவளொடும் பெருந்தகையிருந்ததே”

என்னுஞ் செய்யுளிற்பிள்ளையார் தாமே தமக்கு இறைவன் செய்த அருட்கருணை யனுக்கிரகத்திறத்தைக் கிளந்தெடுத்து உரையாநிற்பவும், அதனை ஆராய்ச்சிசெய்து உணரமாட்ட ாது உரைத்த அவருரை இழுக்குரையாமென்று ஒழித்திடுக. இனி அச்செய்யுட்பொருள் ஒருசிறிது உரைக்கின்றாம்.

""

99

போதையார் பொன்கிண்ணத்து அடிசில் இதழ்விரிந்த தாமரைமலரைப் போல வாயகன்று செவ்வென விளங்கும் பொன்வள்ளத்தில் உமையம்மை கறந்து ஊட்டிய கொழும் பாலுணவை போதை என்பதில் 'ஐ' காரம் “குறவரை யார்க்குங் ளிர்மலை நாட என்னுந் திருச்சிற்றம்பலக்கோவை யாரிற்போல வந்த சாரியை, ‘ஆர்’ என்பது “செப்புற்ற காங்கை "தோளுற்றொர்தெய்வம்” என்னுந் திருக் கோவையார் சிந்தாமணியிற்போல உவமவுருபின் பொருள்பட வந்தஉவமவாசகம்; மாற்றுயர்ந்தபொன் செவ்வென்று பொலிதலானும் வள்ளம் வாயகன்று வட்டமா யிருத்தலானும் உவமை வண்ணமும் வடிவும் விராய்வந்தது, இவ்வாறே "பாண்டிலெடுத்த பஃறாமரை கீழும்பழனங்களே” என்று திரு கோவையாரினும் போந்ததுகாண்க. ஆசிரியர் நச்சினார்க் கினியரும் “பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங்கு” என்புழி வண்ணமும் வடிவும் விராய்வந்த வுவமையென்றுரை யுரைத்திட்டார். தாதையார் பொல்லா தெனமுனிவு உற.சிவ பாத விருதயரென்னுந் தந்தையார் இழிந்தாள் ஒருத்திதந்த எச்சிலாதலின் அது நுகர்தல் தீதாமென்றுரைத்து வெகுள; தான் என்னை ஆண்டவன் - தான் தன் அருட் கருணையான் விரும்பிவந்து என்னை ஆண்டுகொண்டான்; அங்ஙனம் ஆண்டுகொண்ட இறைவன், திருவடையாளங்கள் யாவையோ வுடையானெனின் - காதையார் குழையினன் - காதிற் செறிய இடப்பட்ட வெண்டோடு உடையனாம்; அதுவன்றியும்,

-

பேதையாளவளொடும் தான் ஞானசொரூபியாயிருந்தே உலகத்துப்பெண்டிர்க்கெல்லாம் அறியாமை கற்பித்தல் வேண்டுதலின் தானும் அறியாமையுடையாள்போற் றோன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/85&oldid=1574501" இலிருந்து மீள்விக்கப்பட்டது