உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

61

உமையம்மையுடன் பிரிவறக்கலந்து ‘அறியாமை’ என்பது பண்மைக்குணம் நான்கனுள் ஒன்றாம், அது தானொரு பொருட்டன்மை அறிந்தும் அறியாததுபோல் ஒழுகுதல், ஆசிரியர் நக்கீரனாரும் “மடமென்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்று உரைகூறினார். பெருந்தகை சிற்றறிவுஞ் சிறுதொழிலு முடையராகிய ஆன்மாக்கள் போலாது அவற்றையெல்லாந் தன்னகப்படுத்து வரையறை யின்றி விரிந்து செல்லும் வியாபகவுணர்ச்சியும் முழு முதலாற்றலும் உடையனாகிய காரணத்தினாலே பெருந்தகை யாய் விளங்குந் துரிய முழுமுதல்வனான சிவபெருமான்; இருந்தது ஆன்மாக்கள் தன்னை வழிபட்டு உய்யும்பொருட்டுத் தானே தன் பெருமைக்குணங்களைச் சுருக்கிக்கொண்டு கருணையே திருமேனியா வெழுந்தருளி யிருந்த திருநகரம்; கழுமல வளநகர் தன்னை வந்தடைந்த ஆன்மாக்களின் மும்மலங் கழுவிச் சுத்தஞ்செய்கின்ற ஒரு பெருங்காரணத்தாலே கழுமலம் என்று பெயர் பெற்ற வளவிய நகரமாம் கழுமலநகர் / சீகாழி; பிள்ளையார் தமக்கு அனுக்கிரகிக்கும் பொருட்டு இறைவன் தரித்துவந்த சகள மங்கள அருட் கோலத்தின்கட் குழையிடப் பட்ட திருச் செவியைச் சுட்டித் "தோடுடைய சவியன் என்று பதிகங் கட்ட யிட்டருளிவாறுபோலவே, ஈண்டுங் “காதையார் குழையினன் என்று குறிப்புரைத்தருளினார். இதுகிடக்க.

-

ளை

""

இனி, நீர் கூறிய தருக்கவுரைகளெல்லாம் ஒக்குமன், சிவபாத விருதயர் பிள்ளையாரைத் தடாகக்கரையில் இருவித் தாம் நீரிலிழிந்து முழுகியிருந்த சமயத்திற் பிள்ளையார் அவரைக்காணாது அழுதலைக்கண்டு ஆண்டு வந்த புருடனும் மனைவியுமாகிய இருவர் அவர்க்கு இரங்கிப் பாலூட்டிப் போயினாரென்றும், தந்தையார் கரையில் வந்து வெகுண்டு வினாதலை அஞ்சிப்பாலூட்டி னாரிவர் என்றுரைப்பிற் பின்னும் வெகுள்வரெனக் கருதித் தமக்குச் சிவபெருமானும் உமையம்மையாரும் அங்ஙனம் பாலூட்டினாரென்று பொய்யுரைத்தாரென்றுங் கொள்ளா மோவெனின்; நன்று

கடாயினீர், நல்லது தீயது பகுத்துணர மாட்டாத பிள்ளைப்பருவத்தில் இஃது உரைப்பின் நன்றாம். மற்று இஃது உரைப்பிற்றீதாம் என்றுணர்ந்து பிறழக்கொண்டு பொய்யு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/86&oldid=1574502" இலிருந்து மீள்விக்கப்பட்டது