உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

  • மறைமலையம்-8

ரைத்தாரென்றல் உலகவியல்பொடு மாறுபடுத லானும், உலகவியற்கையொடு முரணாமைப்பொருட்டுப் பிள்ளையார் நிகழ்த்திய அற்புதங்கட்கு வேறுவிவரணங் கூறப்புகுந்து வாதம் நிகழ்த்தும் நீவிரே அங்ஙனம் உலக வியற்கையொடு முரண்பாடு பெரிதுடையிராய் 'மசகக்கடிக் கஞ்சிப்புலி வாய்ப்பட்டது' போற் பெரிதும் இடர்ப்படுவீராத லானும் அவ்வாறு கோடல் ஒருசிறிதும் பொருத்தமுறுவ தின்றா மென்பது உணரக் கடவீராக. அல்லதூஉம், சாதாரண மக்களாற் பாலூட்டப் பட்ட பிள்ளையார் அங்ஙனம் ஊட்டப்பட்ட அக்கணத்தே பேரறிவும் பேராற்றலும் உடைய ராய்ப் பிள்ளைப்பருவத்தில் வரற்பாலதன் றாய் மிகச்சிறந்த திருப்பதிகங் கட்டளை யிட்டருளியவாறு யாங்ஙனம்? எனக் கடாவுவார்க்கு நீர்கூறும் பரிகாரஞ் சிறிதுமின்றாம் அற்றன்று, பிள்ளையார் அறிவுகூடாச்சிறுபருவத்தின ராதலாற்றமக்குப் பாலூட்டிய சாதாரணமக்களையே

அங்ஙனம் அறியாமையாற் சிவபெருமானென்றுரைத்திட்டா ரெனின்; நன்று சொன்னீர், பால்பருகிய அக்கணத்தே திருஞானசம்பந்தப்பிள்ளையாராய் வியாபகவுணர்ச்சியும் முழுமுதலாற்றலுமுடையராய்த் திகழ்ந்து உலகமெல்லாந் தம்மாணை வழி நிறுத்தவல்ல தெய்வப் பெற்றியாளரான அப்பெருமானார் சாதாரண மானுடரையுஞ் சிவபெருமா னையும் வேறுபிரித்து அறிய மாட்டாது மயங்கிக் கூறினா ரென்றலும் அறியாமை முதிர்ச்சியா யொழிந்திடு மென்க.

CC

மண்ணினல்லவண்ணம்

இனி, இவையெல்லாம் ஒருபுறங்கிடக்க, நீவிரெடுத்துக் காட்டிய "தோடுடைய செவியன்” என்னும் திருப்பதிகத் திலும் என்னுந் திருப்பதிகத்திலும் பிள்ளையார் தாங்குழந்தைப்பருவத்தினரென்பது புலப்படக் கூறாமை யான், அப்பிள்ளைப்பருவ வலியுடைக்காரணம்பற்றி நீவிர் நிறுவப்புகுந்த இறைவன் சகளமங்கள அருட்கோல வியல்பு துர்ப்பலமாய் விடுமாலோவெனின்; அறியாதுகூறினீர், பிள்ளையார் அப்பர் சுவாமிகளோடு வேதாரணிய தலத்தில் எழுந்தருளியிருந்தபோது மதுரைமாநகரத்திற் சமணருடைய போதனையாற் சைவசமயம்வழிஇச் சமணமதந்தழீஇய தம் புருடரான பாண்டிய அரசனையுள்ளிட்டுப் பிரசைகளெல் லாரையுந் திரும்பச்சைவராக்குதல்வேண்டி மங்கையர்க்கரசி என்னும் பாண்டிமாதேவியார் பிள்ளையாருக்குத் திருமுகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/87&oldid=1574503" இலிருந்து மீள்விக்கப்பட்டது