உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் -8

ஒருசிறிதும் பலியாமைகண்டு மிகவருந்தித் தம்மனையுரிமைக் கிழத்தியாராகிய மங்கையர்க்கரசியாரைத் தன்மாட்டு வருவித்து அவர்க்கு இதனைத் தெரிவித்தான். அரசியாரும் உடன்வருந்தித் தங்குறிப்பு நிறைவேறுங் காலமிதுவென்று எண்ணித் தங்கொழுநனை நோக்கிப் “பிள்ளைப்பருவத்தே உமை திருமுலைப்பாலுண்டு ஞானசம்பந்த மூர்த்தியாய்த் தந்திருக்கூட்டத்தோடு இந்நகரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் இங்கு எழுந்தருளினால் இந்நோய் தீரும்." என்றுரைப்ப, அதனைக்கேட்ட அரசனும் அதற்கு உடன் பட்டுத் தம் அமைச்சரான குலச்சிறையாரைப் பிள்ளையாரிடம் போக்கினான். அமைச்சரும் நிகழ்ந்தவெல்லாம் பிள்ளையாருக்கு விண்ணப்பித்து அவர் பாண்டியனிடத்திற்கு எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அருமைத்திருவுருவைக்காண்டலும் பாண்டியன் ஆறுதல் பெரிதுடையனாயினான். இவ்வாறு ஞானசம்பந்தப்பெருமானார் பாண்டியனருகில் மங்கையர்க் கரசியார் குலச்சிறையார் பக்கத்தே எழுந்தருளியிருக்கும் அளவில் ஆண்டுக்குழுமியிருந்த சமணக்குருமார் பிள்ளை யாரைச்சுட்டிப் பலவாறு இகழ்ந்து சொல்லிக் குரைத்திட்டார். பக்கத்தேயிருந்து அதனைக்கண்டு பொறாராகிய மங்கையர்க் கரசியார் தங்கணவனை நோக்கி குழந்தையாயிருக்கும் பெருமானை இவர்.

பத்திராதிபர் குறிப்பு: சென்ற 1901 ஆண்டு அக்டோபர் மாதம் வெளிவந்த சித்தாந்ததீபிகை என்னும் ஆங்கில மொழிப்பத்திரிகையிற், திரிசிரபுரம் செயிண்ட் ஜோஸப் கலாசாலையில் தமிழ்ப்புலமை நடாத்தும் பண்டிதர் ஸ்ரீசவரி ராய பிள்ளையவர்களால் எழுதப்பட்ட ஓர் அரியவிஷயம் பிரசுரிக்கப்பட்டது. இது, பிரஞ்சு தேசத்துத் தலை நகராகிய பாரிஸ்பட்டனத்தில் பிரபலபண்டிதராகியஜுலியன் வின்சன் என்பவர் தமிழ்ப் பாஷையைப்பற்றியும், அதனைவழங்கும் நன்மக்களைப்பற்றியும் நிகழ்த்திய சில ஆசங்கைகளைப் பரிகரித்து உண்மைப்பொருள் வலியுறுக்கும் பொருட்டு எழுதப்பட்ட ஓரரிய விஷயமாம். அவ்விஷயம் பிரபல நியாயங் களால் தமிழ்பாஷை மாட்சிவிரிக்கும் பெற்றியுடைமையானும், அதனோடு பலநுட்பப் பொருள் இனிது அறிவறுத்தலானும் தமிழ்ப்பாஷை ஆராய்ச்சிசெய்வாரெல்லாம் இன்றியமையாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/89&oldid=1574505" இலிருந்து மீள்விக்கப்பட்டது