உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

65

கவனிக்கற்பாலதேயாம். இவ்வாறே பண்டிதர் சவரி ராயரவர் கள் நுட்பப்பொருள்செறிந்து எழுதிப் பிரசுரித்த விஷயங்கள் பலவுள. இனிப், பண்டிதர் ஜுலியன் வின்சன் என்பவர் விஷயத்தின்மேல் பண்டிதர் சவரிராயர் எழுதிய அவ்விஷயத் தின் கண் தாம் தொல்காப்பியமுழுமுதல் இலக்கண நூலைப் பற்றி விவகரிக்கவந்தவிடத்து அவ்விலக்கண நூல் தொல் எழுதிய உருவத்தோடு இப்போது நடை பெறுவதின்றென்றும், அதன் கண் இடையிடையே செருகப் பட்ட சூத்திரங்கள் பலவுளவென்றும் அதுமுதன் முதற் செய்யப்பட்டகாலத்து அறுநூறு சூத்திரங்களுடையதா யிருந்ததென்றும் தம் அபிப்பிராயம் மொழிந்திட்டார்கள்.

காப்பியனார்

இதனைக்கண்டயாம் செந்தழிழ்ப்பழைய இலக்கண விலக்கிய நூலுரைகளின் கண் அங்ஙனம் இடைச்செருகும் வழக்கம் க்கம் ன்றென்பது ஒரு சிறிதுகாட்டி அவர் கட்கு ஓராப்தலிகிதம் விடுத்தோம். அதன்மேல் அவர்கள் எழுதியவிஷயம் வருமாறு:

தொல்காப்பியத் தொல்லிலக்கணப் பரிசீலனம்

அன்பார்ந்த ஐயா,

சித்தாந்த தீபிகையில் வெளிவந்த பாரிஸ்மாநகரத்து, ஆசிரியர் ஜெ. வின்சன் (Prof. J.Vinson) என்பாரது “சில விவாதாம்சங்கள்” (Some Disputed Points) என்னும் தலைப்பெயரிய லிகிதத்திற்கு, அப்பத்திரிகையின் கண்ணே

யானெழுதியவிடையின்மேல் தங்களது நல்லபிப்பிராயத்தை நேரிற்கடிதவாயிலாய்த் தெரிவிக்க அன்பு கூர்ந்ததோடு, அவ்வியாசப்பொருளுள் தொல்காப்பிய நல்லிலக்கண நூலைப்பற்றியபகுதி ஒன்றில் தங்களுடன்பாடின்று என்றும் அந்நூலின் கண்ணும் இடைச்செருகுதல் (Interpolation) உண்டென்ற என் கூற்றுக்கு ஏற்புடைக்காரணங்களை யெடுத்துரைப்பின் தங்கள் அபிப்ராயத்தை மாற்றிக் கொள் வீர்கள் என்றுங் குறிப்பித்தீர்கள். இத்தகையதங்கள் உண்மை நட்புரிமையொடு கூடிய உசாபவுதலுக்காக மிகநன்றியறிதற் கடப்பாடுடையேன்.இவ்வாறே யாம் ஒருவர்க்கொருவர் கருத்து மாறுபட்டவிடத்து உசாவித் தழுவுவனதழீஇத் தவிர்வன தவிர்த்தலாகிய செயலே உண்மை நட்புக்குரிய இயலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/90&oldid=1574506" இலிருந்து மீள்விக்கப்பட்டது