உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

அதுபற்றியென்னை

மறைமலையம் 8 – 8

ம்

99

வறுத்த லாகாது என்றும் வரைந்தீர்கள். அத்திறஐயப்பாடு என்மாட்டுத் தங்களுக்கென்று மிருத்தல்வேண்டா. இவ்வழித்தாய ஆராய்ச்சிக்கண் கருத்து மாறுபாட்டைப் பெற்றிட்டதாயினும் அதுபற்றி யொருவரை ஒருவர் வெறுப்பா மல்லேம். யானெழுதிவரும் பற்பலவிஷய ஆராய்ச்சிகளுட் சிற்சில பிறர்க்குடம் பாடாகாமே அக்கோட் பாட்டின் கண் யானேதனிநிற்பல் என்றதுணிவு எமற்குளது. தன்னோடொருமைப் பாடுடைய ரல்லரென்று பிறர்பால் ஒருவன் மனங்கோணுவனெனின், அஃதன்னோன் அறியா மைக்கே சான்றாம். யானெழுதிவரும் எவ்விஷயங்களுள்ளும் தங்களுக்குடன்பாடல்லாதவற்றை எடுத்துக்காட்டி, அந்நெறிக் கென்னைத் தெருட்டற்கு வாய்ப்புடையவெனத் தங்களுக்குத் தோன்று நியாயங்களை Lகிதவாயிலாயேனும் பல்லோர்க்கும் பயன்படுமெனக் கருதின் பத்திரிகைவாயிலாயேனும் விளக்கிக் குறைபெய்க என்று தங்களையும் மற்றுந்தமிழபிமானசீல அன்பர்கள் அனைவரையுமே வேண்டுகின்றேன். கொண் டதே கொள்கை என்னும் பிடிவாததுர்க்குண மென்னை விட்டுத் தூரமகல்க. உண்மையை உள்ளவாறு உணர்தலும் உணர்த்தலுமே நம்போலியர்க்குரிய முறைமையுங் கடமை யுமாவன.

இனி, தொல்காப்பியம் பின் வளர்ச்சியையும் இடைச் செருகுதலையுமுடைய தோர்நூல் என்று யான்கூறியதில், தாங்கள் உடன்படாமைக்கு, ‘ஒருநூலினிடை யிடையே வேறுபலவற்றை எழுதிச்செருகும் வழக்கம் பண்டைக்காலத் தமிழ்ப்புலவரிடங் கிடையாது. அங்ஙனம் அவ்வழக்கு நிகழ்ந்திருக்குமாயின் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்கள் கலந்தனவென்ற ஆசிரியர் நச்சினார்க்கினியர் அவ்வா றேனைய நூல்களுக்குங் கூறியிருப்பர். இனித் தொல்காப்பியத் திற்கு உரைகண்ட இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், கல்லாடர் முதலாயினாரும் இடைச் செருகு தலைப்பற்றி ஒன்றுங் கூறினாரல்லர்" என்று காரணங்காட்டி, இங்ஙனமாகத் தாங்கள் எந்தமெய்ச்சான்று காண்டு தொல்காப்பிய நல்லிலக்கணநூலின் கண்ணும் டை டச் செருகுதல் உண்டென்று கூறினீர்கள்?” என்றும் வினவினீர்கள். இங்ஙனம் யான் ஆண்டுச் சுருங்கச்சொல்லியதை யீண்டு விரித்துவிளக்க

66

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/91&oldid=1574507" இலிருந்து மீள்விக்கப்பட்டது