உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

67

ஓர் அமயநல்கியதன்பொருட்டுத் தங்களுக்கு இன்னொரு முறை

நன்றிகூறுகின்றேன்.

செருகுதலுமுள்ளன

என்பதில்

இனி, பண்டைக்காலத் தமிழ்நூல்களிலு மிடைச் செருகுதல் உண்டென்பதைச் சிந்தாமணியிற் கந்தியார் பாட்டுக்கள் கலந்துள்ளனவென்பதைத் தாங்கள் ஒப்பியதே மெய்ப்பிக்கும். மற்றும், தொல்காப்பிய நல்லிலக்கணநூலில் சேர்க்கையும் தாங்கள் உடன்படாமைக்கு வலியுடைக்காரணமாயுள்ளது ஒன்றே என்றும் புலப்படுகின்றது. அது பூர்வ ஆசிரியர் ஒருவரும் அங்ஙனஞ் சொற்றனரல்லர் என்பது. அந்நூல் சேர்க்கையுஞ் செருகுதலும் உடையதொன்று என்றுயான் கொள்ளக்கிடந்த காரணங்கள் மூன்று, அவை பின்வருமாறு:

1. தொல்காப்பிய நல்லிலக்கணநூலின் முதற்றோற்றம் அஃது அறுநூறு சூத்திரங்கொண்டெழுந்த வடிவினது என்னும் ஐதீகம். பின்னர் அது மூன்றத்துணைப் பெருகியதன்காரணம் அதங்கோட்டாசாற்கு ஆசிரியர் தொல்காப்பியர் இறுத் தலிடை என்ப. இக்கூற்றுண்மை எவ்வாறாயினு மாகுக. பின்னையோ, தொல்காப்பியம் தன் முதனிலையினும், பின்னிலை பெருகிற்று என்பதற்கோர் மெய்ச்சான்று என்பது மறுக்கப்படாது.

2. இறையனாரகப்பொருளுரையில், பாண்டியனாற் கடைச்சங்க மேற்பட்ட ஞான்று, ‘அரசன் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப்பக்கமும் ஆட்போக்க, எழுத்த திகாரமும் சொல்லதிகாரமும், யாப்பதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து பொருளதிகாரம் வல்லாரை எங்குந்தலைப்பட்டிலேம் என்றுவந்தார் வர, அரசனும் புடைபடக்கவன்றான். அரசனது கவலைதீர்ப்பான் ஆலவாய் இறையனாரகப்பொருட் சூத்திரம் அறுபது அருளினார். அதற்கு நக்கீரர் உரைகண்டனர். என்று அந்நூன்முகங் கூறுகின்றது. இறையனாரகப்பொருளுரைக்கு நூன்முகஞ் கூறினார் நக்கீரரது மாணவப்பரம்பரையில் எட்டாவது வந்துள்ளாராகிய முசிறியாசிரியராதல், அவ்வாசிரியர் நீலகண்டனாரது மாணாக்கருள் ஒருவராதல் ஆகற்பாலார். நக்கீரருக்கும் முசிறியாசிரியர்க்கும் இடைநிகழ்ந்தகாலம் ஒரு நூற்றாண்டிற்கு எவ்வாற்றானு மேற்படாது. மேற்படாது. ஆசிரியர்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/92&oldid=1574508" இலிருந்து மீள்விக்கப்பட்டது