உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

❖ LDM MLDMOED - 8 → மறைமலையம் லயம் –

நச்சினார்க் கினியர்க்கு முசிறியாசிரியரோ பன்னூற்றாண்டு முன்னுள்ளார். இவர் இறையனாரகப்பொருளுரைக்கெழுதிய புனைந்துரையில், தனக்கிணையின்றி மிக விரிந்து பரந்து கிடக்கும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப்பற்றி

ன்றுங்குறியாமை பெரிதுங்கவனிக்கற்பாலது, ஆகவே, அகப்பொருளுரை நூன்முகத்தால் யாம் உணரக்கிடப்பது யாதெனின் (A.) கடைச்சங்கத்தின் ஆரம்பத்தில் தொல் காப்பியப் பொருளதிகாரம் அச்சங்கத்தார் ஆராய்ச்சிக்குக் கிடைத்தில தென்பதும், (B.) பொருளதிகாரத்தின் பொருட்டு அரசனும் அவயத்தாரும் கவன்றனராக, அந்நாளுளொருநாள், அகத்திணைப்பொருட்டாய் அறுபது சூத்திரங்கள் அடங்கிய தோர் சுவடி தெய்வாதீனமாய் அவர்க்கு வாய்த்தது என்பதும், (C.) அந்நூல் வரன்முறையறியப்படாமையானே, ஆலவாய்ப் பெருமானே அந்நூலையருளி மனக்கவற்சியைத் தீர்த்தனன் என அரசன் அகமகிழ்ந்து, அவ்வறுபது அவ்வறுபது சூத்திரங்களையும் செப்பிதழகத்துப்பொதித்து றைவனார் பீடத்தின்கண் சமர்ப்பித்து நன்றிபாராட்டி அன்று தொட்டு அரசனும் அவயத்தாரும் ஆலவாய்ப்பெருமானையே தங்கழகத்தின் றலைமைப்புலவர் (Chancellor) எனக் கொண்டொழுகினர் என்பதும் ஊகிக்கற்பாலன. இங்ஙனம் கடைச்சங்கத்தின் ஆரம்பத்தில், அச்சங்கத்தார் ஆராய்ச்சிக்குப் பொருளதிகாரம் கிடைத்திலதென்பதால், தொல்காப்பியப் பொருளதிகாரம் பிற்காலத்ததென்றேனும், இறையனாரகப்பொருட்கு அந்நூல் பிந்தியதென்றேனுமாகாது.பின்னையோ, அந்நாளில் அரசனது பெருமுயற்சியால் தமிழ்நாடெங்குந்தேடியருமை யாய்க் கண்டடையப்பெற்ற பலபிரதிகளைக்கொண்டு பொருளதி காரம் கடைச்சங்கத்தாரால் தொகுத்துப் பூரண மாக்கப் பட்டதென்பது பெறப்படும். ஆகவே,தொல்காப்பியம் தன்பூர்வநிலையினும் மும்மடங்கு பெருகியது இக்கடைச் சங்ககாலத்து நிகழ்ச்சியேயன்றிப் பிறர்கூறுமாறு அஃது அரங்கேறியகாலத்து நிகழ்ந்ததோர் ஆக்கமன்று என்பதும்

6

இதனால் பெறப்படுவதொன்றாம்.

3. தொல்காப்பியம் பின்னர்ப்பெருகி வளர்ந்த நிலையது என்றற்கு முன்னையவிரண்டும் புறச்சான்றுகளாம்; பின்னை யதோ அதன் அகச்சான்றாம். அஃது அந்நூல் அமைப்புத் திறனே. ஏனைய இரண்டினும் மற்றிது மிக்குவலியுடைத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/93&oldid=1574509" இலிருந்து மீள்விக்கப்பட்டது