உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

69

சரித்திரமரபொடு தமிழிலக்கியங்களைப் பொருந்த ஆராய் வார்க்குக் கடைச்சங்கத் தாரால் தொல்காப்பியத் தலைப்பின் கீழ்ச் சேர்த்துத்தொகுக்கப்பட்ட சூத்திரத் தொகுதிகள் யாவும் தொல்காப்பிய முனிவரருளிய சூத்திர யாப்புக் கடாமோ வென்பதில் ஐயுறவுண்டாகாமற் போகாது; என்னையெனின், அச்சூத்திரத்தொகுதிகளுட்சில மிகப்பழைய னவும் பல பின்னாளை வரம்பினவுமாகலின். ஆகவே பிற ஆசிரியர் இயற்றிய சூத்திரங்கள் பல,. இயல்கள் சில, ஒருங்குசேர்ந்து, அவையியற்றினார் இனையரெனத் துணியப் படாமையின், தொல்காப்பியப்பெயரின்கீழ்க் கொணரப் பெற்றன வென்றே துணியப்படும். இவ்வுண்மையைக் கீழ் ஆராய்வாம்.

தொல்காப்பியந் தென்னாடுகடல் கொள்ளப்படுமுன் எழுந்ததோர் பண்டை நூல்; அக்காலத்து ஆரியர் தென்னா டுற்றுத் தமிழரோடுறவாடினர் அல்லர், அந்தணர் எனத் தமிழ்நூலுட்கூறப்படுவோர் ஆரியப்பிராமணரல்லர், அவர் தமிழ் நாட்டறவோரே. அத்தகையரே அகத்தியரும் தொல் காப்பியரும். ஆரியங்கலவாத பண்டை நாளை நூலாகிய இதனுள் ஆரியமொழிகளும் ஆரியவழக்குகளும் ஆரிய ஆசார விபவங்களும் விரவிவந்தனவெனின், அவை எங்ஙனங் கலந்தன? பாருங்கள்! பிரம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் எனுஞ் சதுர்வருணப் பாகுபாடு தமிழ் நாட்டினதன்று. அக்கொள்கை ஆரியதேயத்துப் பிறந்து ஆண்டே பெரு வழக்காயது; பின்னர் ஆரியக்கலவையால் அக்கோட்பாடு தமிழ்நூலுள்ளும் புகுந்து வெளிப்பட்டது. ஆயினுமென்னை? அந்நாற்சாதிப் பாகுபாடு தமிழகத்து நூலியல்வழக்கா யொழிந்ததேயன்றி, உலகியல் வழக்காய் ஒரு காலும் முடிந்ததன்று. அங்ஙனமாக, அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபினர பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்" என நால்வகைச் சாதியையும் இவர்க்குரிய தொழில்களையும் வகைப்படுத்து வற்புறுத்துக்கூறும் த்தொடக்கத்துச்

66

சூத்திரமுதலாயின பண்டைக் காலத் தனித்தமிழ் நுலாகிய தொல்காப்பியத்தின் கண் இடைச் செருகின வேயன்றி மற்றென்னை? இன்னுந் தொல் காப்பியத்தில், தமிழுலகின் எல்லை, “வடவேங்கடந்தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து” என்றுவரையறுக்கப் பெற்றிருக்கின்றது. கூற்றையுடைய பாயிரச்சூத்திரஞ் சொன்னார்

க்

தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/94&oldid=1574510" இலிருந்து மீள்விக்கப்பட்டது