உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

❖ LDMMLDMELD - 8 →

மறைமலையம் லயம் –

காப்பியனார் என்றார் இறையனாரகப் பொருளுரைக்கு நூன் முகங்கூறினார்; உரையாசிரியர்களோ இது சொற்றார் ராகிய

தொல்காப்பியனாரோடு

தன்

ஒருசாலைமாணாக்க பனம்பாரனார் என்றனர். தொல்காப்பியனார் தமது நூலைச்சொற்றகாலம், குமரியாற்றின் தெற்கண் இருந்த நாற்பத்தொன்பது நாடுகளுங் கடலாற்கொள்ளப்பட்ட காலத்தின் முன்னரது. அங்ஙனமாகத் தமிழுலகின் பெரும்பகுதி கடலாற்கொள்ளப் படு முன்னர்த்தென் பால் வடபால்களில் விரிந்து பரந்து கிடந்த தமிழகத்திற்கு நடுநாயகமாய் விளங்கிய கபாடபுரத்தின் கண்ணே வீற்றிருந்த சங்கத்தார்க்குத் தொல்காப்பியம் பிரதான்னியமும் பிரமாண் ணியமுமாயிருக்க, பாயிரச்சூத்திரத்தில், தொல்காப்பியனார் காலத்துத் தமிழுலகிற்குத் தெற்கெல்லைகுமரியாவைத்துக் கூறியது எங்ஙனம் பொருத்தற்பாலது? இது தென்பாலுள்ள நாடுகள் கடலாற்கொள்ளப்பட்ட பின்னர்க் கடைச்சங்கத்தார் காலத்துத் தமிழ் நாட்டிற்குத் தெற்கெல்லையாய் நிகழ்ந்த தொன்று அன்றோ? ஆதலான், தொல்காப்பியப்பாயிரச் சூத்திரம், இறையனாரகப்பொருளுரை நூன் முகத்தார் கூறுமாறு தொல்காப்பியனாராலாதல், உரையாசிரியர்கள் கூறியவண்ணம் தொல்காப்பியனாரோடு ஒரு சாலைமாணாக் கராகிய பனம்பாரனாராலாதல் இயற்றப்பட்டதாயன்றிக் கடைச்சங்கத்தாரால் இந்நூல் தொகுத்துச்சேர்க்கப்பட்ட காலத்து இப்புலவருள் ஒருவரால் ஆதல், இக்காலத்துக்குச் சமீபகாலத்திருந்த பிறர் ஒருவராலாதல் இயற்றப்பட்ட தென்பதிற்றடையென்னை?

ஆங்கிலந்தமிழ் இரண்டினும் வல்ல அறிஞரொருவர் 'ஐந்திரபாணிநீய வியாகரணங்களை நன்குணர்ந்து அகத்தி யனார் தமிழுக்கு இலக்கணநூலை எழுதினார்' என்னுங் கருத்துப்படத் தாஞ்சொல்லிய பல முன்பின் முரணுறத் தமது பதிப்புரை ஒன்றிற் குறித்தனர். அங்ஙனம் ஆரிய விலக்கண மாகிய பாணிநீயத்திற்கும் பிற்பட்டன அகத்திய தொல்காப் பியங்கள் என்பார்க்கு யான் சொல்லக்கிடந்த தொன்றின்று. கால்டுவலாசிரியர், பர்நல் பண்டிதர் முதலாயினார் தமிழ் இலக்கியங்களைஆராய்ந்தமுறையுமிஃதே. இவரெல்லாம் தமிழ் இலக்கிய வரன்முறையை முறையே உணரமாட்டாதார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/95&oldid=1574511" இலிருந்து மீள்விக்கப்பட்டது