உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

ஞானசாகரம்

""

""

என்

71

தாங்களோ ஆரியக்கலவைக்கு முன்னரே தமிழிலக்கண மெழுந்ததென்றொப்புகின்றீர்கள். எங்ஙனம்மெனின், “வடமொழி மாக்களோடு தமிழ்மக்கள் மிக்குவிராய்ப் பழகத்தொடங்கிய பிற்காலங்களிலேதான் இடைச்செருகுதல் நிகழ்வதாயிற்று. ஒரு நூலிடையிடையே வேறுபலவற்றை எழுதிச்செருகும் வழக்கம் வடமொழிப் புலவர்களிடத்தன்றிப் பண்டைக்காலத் தமிழ்ப்புலவரிடங்கிடையாது று தாங்கள் கூறிய இன்னோரன்னவாக்கியங்களானே அது பெறப்படும். இன்னும், இடைச்செருகுதல் வடநூலாரது இழிவழக்கமே எனக்கொண்டு, அச்செயலைக்கடியுங்குறியை வடமொழி மாக்கள் "தமிழ்மக்கள் என்ற தங்கள் குறியீடுகள் விளக்குகின்றன. உண்மையில், அச்செயல் வறுக்கற்பாலதே. ஆயினும், தொல்காப்பியத்தின்சேர்க்கை செருகுதல் நிகழ்ந்த காரணம் இயற்கைநேர்ச்சியாம். தொல் காப்பியநூலுக்கு முந்திய பல இலக்கண நூல்களும் தமிழுக்கு இருந்தன. "ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்” “முந்து நூல்கண்டு மொழிந் தனன் என்று கூறுகின்ற தொல் காப்பியப்பாயிரச் செய்யுள். அங்ஙனம் நெடுங்காலஅளவிற் றமிழுலகிற் றோன்றிய எண்ணிறந்த நூல்களும், முதலிரு சங்கங்களிருந்த இடங்களும், “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ளத் தமிழ்நாடெங்கும் பெருவழக்கி லிருந்த தொல் காப்பிய மொன்றே எஞ்சியது. எஞ்சிய அவ்வொன்றையே துணைக் கொண்டு பிற்காலத்து ஆசிரியர், இன்றியமை யாவிடத்து வேண்டும் விதிகளையும் அமைத்துத் தம்மாணாக் கருக்குத் தமிழிலக்கணஞ்சொல்லிவைத்தனர். இதுவே தொல்காப்பிய வளர்ச்சிக்குக் காரணம். ஆகவே தொல்காப்பித்தின் பூர்வ சொரூபமென்றும் முதலிரு சங்கங் களுக்கும் ஸ்தானமாயிருந்த குமரியின் தென்பாலுள்ள விரிந்த தமிழ்நாடு கடலாற் கொள்ளப்பட அதனால் எண்ணிறந்த நூல்கள் அழிந்தொழிய எஞ்சிய இவ்வொன்றையே துணைக்கொண்டு ஆசிரியர்கள் வேண்டும் விதிகளையும் தாமாங்காங்கு அமைத்துத்தந்து தம்மாணாக்க ருக்குத் தமிழிலக்கணம் போதித்து வந்தனர் என்றும், பின்னர்க் கடைச்சங்க காலத்துப் பாண்டியனது பெருமுயற்சியால் தமிழ்நாடெங்குந் தேடியகப் பட்ட பல பிரதிகளைக்கொண்டு தொல்காப்பியம் பூரண

தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/96&oldid=1574512" இலிருந்து மீள்விக்கப்பட்டது