உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் -8 8

மாக்கப்பட்டபோது, பிற ஆசிரியர் இயற்றிய சூத்திரங்கள் பல இயல்கள் சில ஒருங்கு சேர்ந்து அவையியற்றினார் இனைய ரெனத் துணியப்படாமையின் ஒருங்குதிரட்டப்பட்டுக் கடைச் சங்கத்தாரால் தொல் காப்பியப் பெயரின் கீழ்க் கொணரப் பெற்றனவென்றும் மேலே விளக்கித் தொல்காப்பியநூல் பின் வளர்ச்சியுற்ற தொன்றென்று தெளிவித்தனன்.

கவும்

இனி, அங்ஙனமாயின், தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பூர்வ ஆசிரியர் ஒருவரும் அவ்வாறெடுத்துக் கூறினா ரல்லரே எனின் நன்குகடாவினீர்கள். ஒவ்வோராய்ச்சியும் ஒவ்வோர் காலத்துக்கே உரியது. காலாந்தரமானது வெவ் வேறு கருவிகளை யமைத்து அவ்வவ்காலத்துக்குரிய நூதன ஆராய்ச்சிக்கு மனதைப்பண்படுத்து கின்றன. பாஷா விற்பத்தி சாஸ்திரமானது (Philology)இப்பொழுது அரை நூற்றாண்டு காலமே தெரிந்து கொள்ளப்பட்டது. ஜர்மானிய சாஸ்திரிகள் அத்தத்துவத்தை 40 வருடங்களுக்கு முன்னர்த் தான் முதலில் கண்டு பிடித்தனர். அது தொட்டுப் பன்னாட்டுப் பண்டிதர் களும் பாஷாசரித்திரங்களை ஆராயவும் பாஷையினங் களையும் அவ்வப்பாஷைக்குரிய ஜாதியாரையும் பரீக்ஷிக் அவ்வவ்வினத்தாரின் ஜன்மஸ் தானங்களையும் அவ்வவ் வின மொழிகளின் மூலமொழி களையும் கண்டுபிடிக்கவும் பெரிதும் முயன்றனர்; முயல்கின்றனர். இத்திறவாராய்ச்சியும் அதற்குரிய கருவி அமைப்புக்களும் நமக்கிக்காலத்து வாய்ந்த வாறே நம் முன்னோர்க்கு அவர் காலத்து வாய்த்தில, இப்பரத கண்டத்துப் பண்டு தொட்டு வழங்கிய சீரும் சிறப்பும் வாய்ந்த தமிழ் ஆரியம் என்றிரண்டும் தனிமொழிகள் என்று பூர்வ ஆசிரியர்கள் உணர்ந்தனரேனும் அவ்விருமொழியும் ஒரே மூலபுருடரை யுடையனவென்றும் அவ்விரு பாஷைகளுக்கு முரிய பெருஞ் சாதியார் நாற்சாதிகளாகப்பின்னர் வகுக்கப் பட்டுள்ள ஒரே இனத்தார் என்றும், அவர் எல்லாம் சிருஷ்டி காலந்தொட்டு ங்கேயே பிறந்து வளர்ந்து இறந்து போனவர் களின் பிற்சந்ததியார் என்று மெண்ணினர். தமிழரும் ஆரியரும் வவ்வேறினத் தார் வெவ்வேறிடத்தர். ஒருவர் முன்னும் மற்றவர் பின்னுமாக வந்து இப்பரத கண்டத்துக் குடியேறினர். பின்னர் ஒரு காலத்து வடநாட்டுச் சமஸ்கிருத முடையாரும் (அவர் அந்நாட்டுத் தமிழரும் ஆரியரும் கலந்துண்டான

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/97&oldid=1574513" இலிருந்து மீள்விக்கப்பட்டது