உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

73

கலப்புச் சாதியார்) தென்னாட்டாரும் ஒருங்குகலந்தனர் என்ற உண்மை நமது பூர்வ ஆசிரியர்க்கு எட்டில. அதனாலே தமிழ்ப்பூர்வ நூல்களுள் ள் இன்னபழைய, இன்னபுதிய, இன்னகலவை என்ற ஆராய்ச்சித்திறனும் அவர்க்கு வாய்த் திலது. ஆதலானே உரையாசிரியர் தால்காப்பியத்

தொல்லிலக்கண நூலின் கண் சேர்க்கை செருகுத லாதிய உண்டெனத்தாம் உணர்ந்தாருமல்லர்; எமக்கு உரைத் தாருமல்லர். ஆயினும், அக்குறை அவர் மேலேறாது அக்கால நிலைமையோடு கழிந்ததுணர்க. அறிவிற் சிறந்த தாங்களே இனியிவற்றை யாராய வேண்டுகிறேன்.

தங்கள் ஆப்தன், டி. சவரிராயன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/98&oldid=1574514" இலிருந்து மீள்விக்கப்பட்டது