உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

6

ஸ்ரீஜ் ஞான சம்பந்தகுருப்யோநம

“வாழ்கவந்தணர்வானவரானினம்

வீழ்கதண்புனல் வேந்தனுமோங்குக ஆழ்கதீய தெலாமரனாமமே சூழ்கவையகமுந்துயர்தீர்கவே"

ஞானசாகரம்

5. உள்ளது போகாது இல்லது வாராது

இந்தப்பழமொழி சாதாரணமாய்த் தமிழ் நாட்டில் யாண்டும் பரவி வழங்குவதொன்றாயினும், அதன்பொருள் எந்தத்தேசத்திலுள்ள எந்தச் சாதியார்க்கும் எந்தச் சமயத் தார்க்கும் உடன்பாடான பொதுமையுடையதேயாம். எளிதாக நாடோறும் வழங்கும் இப்பழமொழிப்பொருளருமை உற்று நோக்குவார்க்கு இனிது விளங்குமாயினும், அதனை ஆழ்ந்து ஆராய்வார் உலகில் ஒரு சிலரேயாவர். ஆகலின், உலக மெல்லாம் அங்கீகரித்து வழங்கும் இதன் அருமைப்பாடு ஒரு சிறிது விளக்கிக்காட்டுவாம்.

இனி, இதன்பொருள் ‘முன்னைக்காலத்தும் நிகழ் காலத்தும் வருங்காலத்தும் இருப்புப்பெற்ற ஒரு பொருள் சூனியமாவதுமில்லை, மூன்றுகாலங்களிலும் இல்லாத சூனியப்பொருள் ஒரு காலத்து உண்டாவதுமில்லை' என்பதேயாம். அவ்வாறாயின், ‘ஆகாயத்தாமரை’ ‘முயற் கொம்பு' முதலிய சொற்பிரயோகங்கள் காணக்கிடத்தல் தான் ஆகாயம்' என்பதும் உள்பொருள்; தாமரை' என்பதும் உள்பொருள், தாமரை தடாகத்தில் ருப்பது, தடாகத்தின் கண் இருப்புப்பெறுவதாகிய தாமரைக்கு ஆகாயத்தின்கண் நேர்ச்சியில்லாமையால் ஆகாயத்தாமரை' என்பது, சொற்கள் தம்முள் இணங்கிப்

என்னையெனின்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/99&oldid=1574515" இலிருந்து மீள்விக்கப்பட்டது