உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானசாகரம்

75

பொருடருதற்கு ஏதுவாகிய தகுதிப்பொருத்தம் இல்லாமை காட்டித் தாமரையினிருப்பை ஆகாயத்தின்கண் எதிர் மறுத்த வாறாயிற்று. இவ்வாறே 'முயற்கொம்பு' என்புழியும் முயல் (முயற்சி) என்பதோர் உள்பொருள், 'கொம்பு' என்பது பிறிதோர் உள்பொருள். ஆடு, மாடு, மான் முதலியவற்றின்கண் இருப்புப் பெறுவதாகிய 'கொம்பு' என்பதொருபொருள் தனக்குநிலைக் களமாகாதமுயலின்கண் இருப்புப் பெறுத லாகாமையின் ஆண்டும் அதனை எதிர்மறுக்கும் பொருட்டாகவே அச்சொற் பிரயோகம் வழங்குமென்றுணர்க. ஆகலின், அச்சொற்பிர யோகங்கள் முக்காலத்துமில்லாத சூனியப் பொருளைக் குறிப்பன என்பது அடாது; மற்று அவை பொருள்கள் வைகளுக்கு உரிய தேர்ச்சியில்லாமை மாத்திரையே விளக்கு வனவாம் என்றொழிய இந்த நூலாடையை நீரால்நனை' என்பதேயன்றி ‘அதனை நெருப்பால் நனை என்றல் ஏலாமையான், பொருள்கள் தம்முட்பொருந்துதற்குரிய சிநேக குணநெறி கடைப்பிடியாது, அச்சொற்பிரயோகங்கள் சூனியப்பொருள் குறித்து வந்தனவாமென்பாருரை குழறு பாட்டுரையாமென்று ஒழிக. இதுபற்றியே சேனாவரையரும் "பொய்ப்பொருள் குறிப்பன வும் பொருளுணர்த்துவனவே யாம்” என் என்று உரைகூறினார். எனவே, சூனியமாக நிற்பதோர் பொருளுமின்றாம்; அதனைக் குறிக்குஞ் சொல்லுமின்றாம். அற்றேல், சூனியம் என்பதுதான் என்னையெனின், உள் பொருளின் எதிர்மறையே அவ்வாறு சொல்லப் படுதலல்லது சூனியப்பொருளெனப் பிறிதுஒன்று இல்லையென்க. ‘இங்கே குடமில்லை படமில்லை' என்றவழிக் குடம்படம் முதலிய வற்றின் இருப்பை ஆண்டு மறுத்த வாறன்றிவேறில்லை யென்ப தூஉம் உலகவழக்கிற் கண்டு கொள்க. யாங்கூறியதே தருக்கநூலார்க்கு முடன்பாடாதல் “பிரதியோகி யுணர்ச்சி யின்றி அபாவவுணர்ச்சி பெறப்படாது” என்று அவர் கூறுமாற்றாற் காண்க. இதனால், தம்முள் நேர்ச்சி யில்லாத பொருள்கள் ஒன்றோடொன்று ஒற்றுமைப்பட்டுத் தோன் றுதல் இல்லையாமென்பதூஉம், இதற்கு முயலின் கண் நேர்ச்சி யில்லாத கொம்பு அதன் தலையில் யாண்டுங்காணப் படாது ஒழிதலே பிரமாணமாய் நிலைபெறு மென்பதூஉம் நன்று விளங்கும். இதுகிடக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/100&oldid=1574516" இலிருந்து மீள்விக்கப்பட்டது