உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் 8 – 8

இனி, ஒருசாரார் தூலமாகக்காணப்படும் இந்த உலகங்களையும், இவற்றின் கண் அறிவுடையராய் இயங்கும் ஆன்மாக்களையும் ஈசுரன் ஒன்றுமில்லாத சூனியத்தினின்றும் படைத்திட்டான் என்பவாகலின் 'இல்லது வாராது' என்றல் பொருந்தாதாம். பிறவெனின்; நன்று சொன்னாய், என்று மில்லாத பாழிலிருந்து உள்பொருளான இப்பிரபஞ்சங்களைப் L படைத்திட்டானென்றல் முன்னேயுரைத்த நியாயவுரைக்கு ஒரு சிறிதும் பொருந்தாமையின் அவர் கூறும் பிரபஞ்சசிருட்டி கொள்ளற்பாலதன்று. அற்றன்று, ஈசுரன் அளவிறந்த ஆற்றலு டையான் என்பது நுமக்கும் ஒப்பமுடிந்தமையின், அப்பெற்றி யனான அவன் இவ்வுலகங்களையும் இன்னும் இவை போல்வன பிறவற்றையும் சூனியத்தினின்று படைத் திட்டா னென்றல் மாறுகொள்ளாதெனின்; ‘ஆற்றல்' என்பதன் இலக்கண மறியாது கூறினாய். ஆற்றல் சக்தியென்பன ஒரு பொருளே தரும். ஆற்றலென்பது அசையாது கிடக்கின்ற ஒரு பொருளை அசைவிப்பதும் அசைகின்ற ஒரு பொருளை அங்ஙனம் அசையாது நிறுத்துதலுமாம். கூட்டல், பிரித்தல், குறைத்தல், மிகுத்தல், திரித்தல், அறுத்தல் முதலிய கருமத் தொகுதிகளும் ஈண்டுக்கூறிய இலக்கணத்தில் அடங்கும். வழுவழுப்பான சமநிலத்திற் கிடக்கும் பருக்கைக் கல்லொன்று தானே இயங்காது. அதனையாம் எமது சிறுவிரலால் அசைவிக்க அஃது இயங்கும் இயக்கப்படுகின்ற அக்கல் மிகப்பருத்துக் கரடுமுரடான நிலத்திற் கிடக்குமாயின் அதனை எமது கைவிரலால் இயக்கல் கூடாது. அதனை எளிதில் இயக்கும்பொருட்டு ஏதாயினும் பிறிதொருகருவி கொண்டு தான் அவ்வாறு செய்தல்வேண்டும். அன்றி அக் கருவியும் வேண்டாமல் யாமே எமதுகைகளால் முயன்று எடுத்து அதனை இயக்குவேமாயின், எம்மைக் கண் மிக்கதேகபலமுடையார்' என்று வியந்து பேசுவார். இவ்வாறே யாம் ஒன்றாய்க் கூட்டுதற்கு அருமையான இருப்புச் சலாகை களை ஒன்று கூட்டியும், இருகூறாக்குதற்கு அரிய பெருத்த மரங்களை ருகூறுபடுத்தியும், அறுத்துக் குறுக்குதற்கு அரியவற்றை அறுத்துக்குறைத்தும், திரிப்பதற்கு அரிய ருப்புக்கோல்களை நூல்போல்திரித்தும், பரிய இருப்புத் தூண்களைத் துகளாக்கியும் வன்மைசெய்தவழி எம்மைக் கண்டாரெல்லாரும் எம்மாற்றலை மிக வியந்தெடுத்துப்

ார்

இவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/101&oldid=1574517" இலிருந்து மீள்விக்கப்பட்டது