ஞானசாகரம்
77
பேசுவர். ஆகவே எம்முடைய ஆற்றலளவு அவ்வாற்றலால் உய்க்கப்படும் கல்முதலிய பொருளளவுபற்றியே அறியப்படுவ தாம். அப்பொருள் சிறிதாயவழி அதனைச் செலுத்துவா னாற்றல் சிறிதென்றும், அது பெரிதாயவழி அதனைச் சலுத்துவானாற்றல் பெரிதென்றும் எல்லாருமுணர்ந்து கொள்வர், இங்ஙனம் பொருள்களின் நிலையை வேறுபடுத்தி அவற்றைத் தொழிற்கண் உய்ப்பதாகிய முயற்சியே ஆற்றல் அல்லது சக்திஎன்பதன்றி உள்பொருளை இல்பொருளாகவும் இல்பொருளை உள்பொருளாகவுஞ் செய்வதே ஆற்றலென யாண்டும் பெறப்படுமாறில்லை. யாங் கூறியதேபிரபலபௌதிக சாத்திரிகளாய பால்வர்ஸ்டூவர்ட் ஜோன்ஸ், பெஸன்டன் கூக் முதலாயினார்க்கும் உடன்பாடாதல் அவ்வவர் நூல்களிற் கண்டுகொள்க. இனி, அவ்வவர் ஆற்றன் மிகுதி அவர் உய்க்கும் பொருட்பரிமாணம் பற்றியே அளந்தறியப்படக்காண்டலால், நாம் வசிக்கின்ற இந்தப் பிருதிவி அண்டகோளகையினையும் இதனினும் எத்தனையோமடங்கு பெரிதாகிய சூரியமண் ல முதலான அனேக அண்டப்பகுதிகளையும் அதிவிசித்திரமாக நிருமித்து, அவை ஒன்றை ஒன்று இழுக்கும் ஆகருஷண சக்தியால் அந்தரத்தில் நெறிபிறழாது இயங்கும்படி செய்வித்து, அவ்வண்டங்கள் ஒவ்வொன்றிலும் அவ்வவற்றின் சீதோஷ்ண இயல்புக்கேற்ப எண்ணிறந்த ஆன்மாக்களை எண்ணிறந்த தேகங்களில் அமைத்து அறிவூட்டியும் அவ்வான் மாக்கள் செய்யும் வந்தனை வழிபாடுகளாகிய நற்கருமங்களையும் அவற்றின் வழுவி அவர்செய்யுந் தீக்கருமங்களையும் அறிந்து அவ்வவர்க்கு ஏற்ற கதி வழங்கியும் பேராற்றல் செய்கின்ற வனாகிய ஈசுரன் அவ்வாறு அளவிறந்த ஆற்றலுடையா னென்று சொல்லப்பட்டானல்லது, சூனியத்தினின்று ஒன்றனைச் சிருட்டித்தலானாதல் சிருட்டிப்பொருளொன் றைச் சூனிய மாக்கு தலானாதல் அவ்வாறு சொல்லப்பட்டா னல்லன் என்று உணர்க. அசேதன அருவ மாயாரூபமாகக் கிடந்த சூக்குமப்பிரபஞ்சத்தினையே இறைவன், ஆன்மாக்களுக்கு உபகாரமாதற்பொருட்டு சேதனவுருவத் தூலப் பிரபஞ்சமாகச் சிருட்டி செய்தான். இத்தனையேயன்றிச் சூனியத்தினின்று இப்பிரபஞ்சங்களையெல்லாம் இறைவன் படைத்தருளினா னென்றல், பௌதிகசாத்திர வியல்பொடு மாறுபடுதலானும், அங்ஙனஞ்சூனியத்தினின்றும் எம்மை யெல்லாம் படைத்து ஒரு